ஜெய்ப்பூர்

ன்றுடன் இந்திய விமானப்படையின் மிக் 27 விமானம் சேவையை முடித்துக் கொள்கிறது.

இந்திய விமானப்படையில் கடந்த,1985ல், ‘மிக்-27’ போர் விமானம் சேர்க்கப்பட்டது. இந்த மிக் 27 போர் விமானம், தரைப் படைக்குப் பக்க பலமாகவும், துல்லியமாகக் குண்டு வீசி, எதிரிகளின் அழிக்கும் திறனும் கொண்டதாகும் . இந்த மிக் 27 விமானம்,கடந்த 1999-ல் நடைபெற்ற கார்கில் போரில், சிறப்பாகச் செயல்பட்டு, பாகிஸ்தான் ராணுவ முகாம்களைத் தகர்த்தது.

இந்த விமானம் மணிக்கு ஆயிரத்து 700 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் கொண்டதாகும்.  அத்துடன் 4 ஆயிரம் கிலோ வெடிபொருட்களைத் தாங்கி சென்று தாக்கும் வல்லமை படைத்ததாகும்.

ஏறத்தாழ  40 ஆண்டுக்காலம் நமது வான் எல்லை பாதுகாவலனாக இருந்த மிக் 27 போர் விமானங்களுக்கு படிப்படியாக ஓய்வளிக்கப்பட்ட நிலையில் கடைசி ஸ்குவாட்ரானில் உள்ள 7 விமானங்களும் இன்றுடன் ஓய்வு பெறுகின்றன. இதில் இந்திய விமானப் படை விமானிகளால் ‘பகதுார்’ என, செல்லமாக அழைக்கப்படும், ‘மிக்-27’  போர் விமானம், இறுதியாக விடைபெற்றுள்ளது.

இன்று ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள விமானப் படைத் தளத்தில், மிக்-27  இறுதியாகப் பறந்து, பல்வேறு சாகசங்களை நிகழ்த்திக் காட்டியது. இதற்காக நடைபெற்ற  விழாவில், ஏர் மார்வில் எஸ்.கே. கோட்டியா உள்ளிட்ட விமானப் படை அதிகாரிகள் கலந்துகொண்டு மிக் 27 விமானத்துக்குப் பிரியா விடை அளித்துள்ளனர்.