ஸ்ரீநகர்:

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அதை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட நிலையில், தற்போதுதான் லடாக் மற்றும் கார்க்கில் பகுதியில் சுமார் 145 நாட்களுக்கு பிறகு தற்போதுதான்  மொபைல் இன்டர்நெட் சேவை வழங்கப்பட்டு உள்ளது.

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கின்ற 370 மற்றும் 35 ஏ ஆகியவற்றை ரத்து செய்யும் மசோதா கடந்த ஆகஸ்டு மாதம் 5ந்தேதி  பாராளுமன்ற இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து, இது தொடர்பான மசோதா உடனே அமலுக்கு வந்தது.

அதன்படி,  காஷ்மீர் மாநிலம் ஜம்மு மற்றும் காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன.   லடாக் சட்டப்பேரவையற்ற யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது. கடந்த அக்டோபர் 31ந்தேதி  முதல் ஜம்மு,காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை அதிகாரப்பூர்வமாக யூனியன் பிரதேசங்களாக மாறி உள்ளன.

இதனால், இங்கு பல இடங்களில் வன்முறை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, அங்குள்ள தொலைபேசி, சமுக வலைதள சேவைகள் மற்றும்இணையதள சேவைகள் முடக்கப்பட்டன.

முன்னதாக காஷ்மீரில் ராணுவத்தினர், பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர். அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுக்காவலில் சிறை வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் அங்கு படிப்படியாக சுமூக நிலை திரும்பியதைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளுக்கு இணைய தள சேவை வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போதுதான், லடாக் பகுதி மற்றும் கார்க்கில் பகுதியில் மொபைல் இண்டர்நெட் சேவை வழங்கப்பட்டு உள்ளது.

சுமார் 145 நாட்களுக்கு பிறகு தற்போது இணையதள சேவை வழங்கப்பட்டுள்ள மக்களிடையே நிம்மதி பெருமூச்சை ஏற்படுத்தி உள்ளது.