டெல்லி:

டப்பாண்டில் நாடு முழுவதும் டெபிட் கார்டு எண்ணிக்கை பெரும் வீழ்ச்சி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு காரணமாக, இந்திய ரிசர்வ் வங்கி வழங்கிய சிப் அடிப்படை யிலான  அட்டையே காரணம் என்று கூறப்படுகிறது.

கடந்த அக்டோபர் மாத கணக்கெடுபின்ப்படி டெபிட் கார்டின் பயன்பாடு 15 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மோடி தலைமையிலான அரசு மீண்டும் பதவி ஏற்றது முதல், நாட்டின் பொருளாதாரம் வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்துள்ளது. இதன் காரணமாக பெருந்தொழில் நிறுவனங்கள் பெரும் வருவாய் இழப்பை சந்தித்து வருவதால், பலர் வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், கடுமையான  வேலையில்லா திண்டாட்டமும் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக,  இளைஞர்கள் மாற்று வேலையை நோக்கி, அடிக்கடி  மாறுவதால், அவர்களது வங்கிக் கணக்குகள், டெபிட் கார்டுகள் பயன்படுத்தாமல் செயல் இழக்கிறது.

நாடு முழுவதும் சுமார் 100 கோடி அளவிலான டெபிட் கார்டுகள் புழக்கத்தில் இருந்து வந்த நிலையில், மின்காந்த பட்டை அடங்கிய டெபிட் கார்டுகளை முற்றிலுமாக ஒழித்து சிப் எனப்படும் கம்ப்யூட்டர் வில்லை அடிப்படையிலான டெபிட் கார்டுகளை பயன்படுத்த ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து, சுமார் 15 கோடியே 50 லட்சம் போலி அட்டைகள் மாயமாகி உள்ளதாகவும்,  தற்போதைய  நிலவரப்படி 84 கோடியே 3 லட்சம் டெபிட் கார்டுகள்தான் புழக்கத்தில் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

[youtube-feed feed=1]