ஏழு ஸ்வரங்கள் தான் இருக்கு ப்ரோ. Atlee strikes again 🤣 pic.twitter.com/xXOeUuOx1c
— Sarath (@ImSarath7) December 22, 2019
அட்லி இயக்கத்தில் விஜய் பெண்கள் கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளராக நடித்த படம் பிகில்.
போஸ்டர் டீசெர் என வெளிவந்த நாளிலிருந்தே அப்படம் சர்ச்சையில் தான் உள்ளது . முன்பு ஹிந்தி படத்தின் காப்பி என சொல்லி வந்தனர்.
படம் வெளிவந்த பிறகு படத்தை பார்த்தவர்கள் சில காட்சிகள் எங்கிருந்து காப்பியடிக்கப்பட்டவை என்பதை சுட்டிக் காட்டி வீடியோ வெளியிட்டனர். சில காட்சிகள் ஒரிஜினல் படத்தில் இருந்தது போன்று அப்படியே இருந்தது. கதாபாத்திரம் பேசுவது, அமர்வது, மேனரிசம் செய்வது கூட அப்படியே இருந்தது.
இந்நிலையில் பிகில் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி மிரக்கிள் என்கிற ஹாலிவுட் படத்தில் இருந்து காப்பியடிக்கப்பட்டுள்ளது என்று கூறி அந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர் நெட்டிசன்கள். ஒரு சில காட்சிகள் தான் காப்பி என்று நினைத்தால் மொத்த படமுமே காப்பியா அட்லி என்று சமூகவலைத்தளத்தில் அவரை வறுத்து எடுக்கின்றனர்.