புதுடில்லி: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் 21ம் தேதியன்று, குடியுரிமை (திருத்த) சட்டம் (சிஏஏ) நாட்டில் மத, சமூக ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் என்று கூறினார்.
சரத் பவார், “சிறுபான்மையினர் மட்டுமல்ல, நாட்டின் ஒற்றுமை மற்றும் முன்னேற்றம் பற்றி நினைப்பவர்கள் CAA மற்றும் தேசிய குடிமக்களின் பதிவேட்டை (NRC) எதிர்க்கின்றனர்” என்றார்.
“சிஏஏ மற்றும் என்ஆர்சி ஆகியவை நாடு எதிர்கொள்ளும் கடுமையான பிரச்சினைகளிலிருந்து கவனத்தை திசை திருப்ப முயற்சிகள்” என்று சரத் பவார் கூறினார்.
முன்னதாக, குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) அதிகரித்து வரும் எதிர்ப்பைப் பற்றி சரத் பவார் கேட்டபோது, ”அமைதியின்மை சில மாநிலங்களில் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், புதிய சட்டம் சில மாநிலங்களில் வரவேற்பைப் பெறும் என்ற பாஜகவின் எதிர்பார்ப்புக்கு மாறாக, அது ஆளும் அசாமிலும் இச்சட்டம் எதிர்க்கப்படுகிறது,
குடியுரிமை (திருத்த) சட்டத்தை “அரசியலமைப்பிற்கு முரணானது மற்றும் பாரபட்சமானது” என்று அழைத்த பிற எதிர்க்கட்சிகளில் என்.சி.பி. யும் அடங்கும். இது நிச்சயமாக இந்தியாவின் மதச்சார்பின்மைக்கு எதிராக உள்ளது என்று அது கருதுகிறது.
புதிய சட்டம் நாடு தழுவிய போராட்டங்களைத் தூண்டியுள்ளது, பல ஆர்வலர்கள், மாணவர்கள் மற்றும் லட்சக்கணக்கான பிற குடிமக்கள் தெருக்களில் வந்து பாஜக தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். சில மாநிலங்களில் ஆர்ப்பாட்டங்கள் அமைதியானவை என்றாலும், பல இடங்களில், வன்முறையாகிவிட்டன.
வடகிழக்கு மாநிலங்கள் மூன்று நாடுகளைச் சேர்ந்தவர்களின் வருகை தங்கள் கலாச்சாரத்தையும் மொழியையும் கடுமையாக பாதிக்கும் என்று அஞ்சுவதால் சட்டத்திற்கு எதிராக எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.