சேலம்:

ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் விவரங்கள் மாவட்ட தேர்தல் அலுவலர்  அறிவித்து உள்ளார்.

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரகப்பகுதிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்குப்பதிவை முன்னிட்டு மதுபானக் கடைகளை மூட மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

அதன்படி, சேலம் மாவட்டத்திற்குட்டபட்ட தேர்தல் நடைபெறும் பகுதிகளிலும் டாஸ்மாக் மதுபான் கடைகள் மூடப்படும் நாட்கள் குறித்து அறிவிக்கப்பட்டு உள்ளத.

அதன்படி, சேலம் மாவட்டத்தில் எப்.எல்.2 முதல் எப்.எல்.11 (எப்.எல்.6 தவிர) வரையிலான மதுபான உரிமங்கள் பெற்ற மதுபானக் கடைகள் மற்றும் மதுபார்கள் மூடப்படும் என்று அறிவித்து உள்ளது.

முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில்  25.12.2019 மாலை 5.00 மணி முதல் 27.12.2019 மாலை 5.00 மணி வரையிலும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், 2வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில், 28.12.2019 மாலை 5.00 மணி முதல் 30.12.2019 மாலை 5.00 மணி வரையிலும் மதுக்கடைகள் மூடப்படுகிறது.

பின்னர்,  வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான 02.01.2020 அன்று நாள் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.