சென்னை: தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பாலசுப்பிரமணியனின் நியமனம் செல்லாது என்று தீர்ப்பளித்துள்ளது சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.
இதுதொடர்பாக கூறப்படுவதாவது; தமிழ் பல்லையின் துணைவேந்தராக பாலசுப்பிரமணியன் நியமனம் செய்யப்பட்டதையடுத்து, அவரின் நியமனத்தை எதிர்த்து தஞ்சாவூரைச் சேர்ந்த பேராசிரியர் ரவீந்திரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தார்.
பாலசுப்பிரமணியன் நியமனத்தில் விதிமீறல் உள்ளது என்றும், அவருக்கு உரிய கல்வித் தகுதிகள் இல்லை எனவும், அவரின் நியமனத்தை ரத்துசெய்து உத்தரவிட வேண்டுமென்றும் மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி வேலுமணி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, துணைவேந்தராக பாலசுப்பிரமணியன் நியமிக்கப்பட்டது செல்லாது என்று உத்தரவு பிறப்பித்தார்.