ராஞ்சி
இன்று காலை 7 மணிக்கு ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது.
பாஜக ஆட்சி செய்யும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரகுபர் தாஸ் முதல்வராகப் பதவி வகிக்கிறார். அவர் ஆட்சி வரும் ஜனவரி மாதம் 5 ஆம் தேதியுடன் முடிவடைவதையொட்டி சென்ற மாதம் 30 ஆம் தேதி முதல் 5 கட்டங்களாகச் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நான்கு கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன.
மொத்தமுள்ள 81 தொகுதிகளில் முதல் கட்டமாக 13 தொகுதிகள், 2ஆம் கட்டமாக 20 தொகுதிகள், 3ஆம் கட்டமாக 17 தொகுதிகள், 4ஆம் கட்டமாக 15 தொகுதிகள் என வாக்குப்பதிவுகள் நடந்துள்ளன. இன்று கடைசி மட்டும் 5 ஆம் கட்டமாக 16 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி உள்ளது.
வாக்கெடுப்பை முன்னிட்டு காவல்துறையினர், துணை ராணுவப்படையினர் உள்ளிட்ட 40000க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இம்மாநிலத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் உள்ளதால் பலத்த பாதுகாப்பு இடப்பட்டுள்ளது. இந்த வாக்குகள் வரும் 23 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.