கான்பெரா: பருவநிலை மாற்றத்தால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலியாவில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது.
மேலும், அங்கே தண்ணீர் திருடப்படும் சம்பவங்களும் நடக்கின்றன. அந்நாட்டில் மழையளவு குறைந்துள்ளதால், நியூ சவுத்வேல்ஸ் மற்றும் கிரேட்டர் சிட்னி ஆகிய பகுதிகளில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது.
கடும் வெப்பத்தால் வனப்பகுதிகளில் தீப்பிடிக்கும் சம்பவங்களும் நேர்கின்றன. இதனால் வனவிலங்குகள் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால், அந்நாட்டு நிர்வாகம் சார்பில் தண்ணீரைப் பயன்படுத்த பலவிதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வாகனங்களைக் கழுவ 2 வாளி தண்ணீர், நீச்சல் குளங்களை நிரப்புவதற்கு முன் அனுமதி மற்றும் இவற்றை மீறுவோருக்கு அபராதம் உள்ளிட்ட பலவிதமான கெடுபிடிக்ள் அங்கே நிலவுகின்றன.
இதனால் மக்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. நியூசவுத்வேல்ஸ் மகாணத்தின் இவான் பிளைன்ஸ் என்ற இடத்தில், தண்ணீர் தொட்டியிலிருந்து 3 லட்சம் தண்ணீர் திருடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.