டில்லி

நாடெங்கும் தேசிய குடியுரிமை பதிவேடு அமலாக்கப்படும் என பாஜக செயல் தலைவர் ஜே பி நட்டா கூறி உள்ளார்.

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.   பல பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.   போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் நாட்டின் பல ஊர்களில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது  இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்துள்ள சீக்கிய அகதிகளை பாஜக செயல் தலைவர் ஜே பி நட்டா சந்தித்து அவர்களுக்குக் குடியுரிமை கிடைக்கும் என உறுதி அளித்தார்.

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நட்டா, ”எதிர்க்கட்சிகள் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தி வருகின்றன.    இவை அக்கட்சிகளின் வாக்கு வங்கிஅரந்சியலில் ஒன்றாகும்.  இதனால் வெளிநாட்டில் இருந்து இங்கு வந்துள்ள சிறுபான்மையினர் குறித்து முன்பு ஆட்சி செய்தோர் கவனம் கொள்ளவில்லை.  இந்த சீக்கிய அகதிகளை அவர்கள் சந்தித்திருக்க வேண்டும்.

கடந்த 28-30 வருடங்களாக இவர்கள் இந்தியாவில் வசித்துள்ளனர்.  ஆயினும் அவர்களுக்குக் குடியுரிமை அளிக்கப்படாததால் இவர்களால் தாங்கள் தங்க ஒரு வீடு வாங்கவோ, குழந்தைகளை பள்ளியில் சேர்க்கவோ முடியாமல் உள்ளனர்.  இவர்களை நமது எதிர்க்கட்சியினர் இவர்கள் வாக்கு வங்கி பலமாக இல்லாததால் கவனத்தில் கொள்ளவில்லை.

இவர்கள் நலனுக்காக தற்போது திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் மோடியின் தலைமையில் நடைபெறும் அரசு அமல்படுத்தத் தயாராக தயாராக உள்ளது.   இதைப் போல் எதிர்காலத்தில் நாடெங்கும் தேசிய குடியுரிமைப் பதிவேடு அமல் படுத்தப்பட உள்ளது”எனத் தெரிவித்துள்ளார்.