சென்னை:

த்தியஅரசு அமல்படுத்தி உள்ள புதிய குடியுரிமை சட்ட திருத்தத்தை மத்திய அரசு திரும்பப் பெறாவிட்டால் வழக்கறிஞர் சார்பாக நாடு முழுவதும் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என்றுஅகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

பாஜக அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரம் அடைந்து வருகிறது. வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் வன்முறை யாக மாறி வரும் நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற போராட்டமும் வன்முறையில் முடிந்தது.

இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ள நிலையில், வழக்கறிஞர்களும் நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து உள்ளனர்.

இதுகுறித்து கூறியுள்ள அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பு நிர்வாகிகள், புதிய குடியுரிமை சட்ட திருத்தத்தை மத்திய அரசு திரும்பப் பெறாவிட்டால் நாடு முழுவதும் மத்தியஅரசுக்கு மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என்று எச்சரித்துள்ளது.