பசுவின் தயிரில் (Cow Curd) உள்ள ஊட்டச்சத்து விபரங்கள்
http://nutrition.agrisakthi.com/detailspage/CURD,%20COW%E2%80%99S%20MILK/275
பசுவின் தயிரானது பண்டைய காலத்தில் இருந்தே பயன்பாட்டில் இருந்து வருகிறது, உணவாகும், மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வந்த குறிப்புகள் இன்றும் நம்மிடையே இருக்கிறது.
பசுவின் தயிர் ஊட்டச்சத்து மிக்கது, இதில் புரோட்டின் எனப்படும் புரதச்சத்து, குறைந்த கொழுப்பு, பாஸ்பரஸ், கால்சியம், பி 12, பி2, பி5 போன்ற விட்டமின்களும் அடங்கியுள்ளது
மருத்துவப்பயன்கள்
கால்சியம் , பாஸ்பரஸ் அதிகமாக உள்ளதால் பற்களுக்கும், எலும்புகளுக்கும் வலு சேர்க்கிறது
இதில் புரோபயாடிக் எனப்படும் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் தொகுப்பு உள்ளதால் இது சீரண மண்டலம் மற்றும் குடலை பாதுகாக்கிறது. தயரில் உள்ள பாக்டீரியாக்கள் வயி்ற்றில் உள்ள நுண் கிருமிகளை அழிக்கிறது, இதனால் நோய் எதிர்ப்பு திறன் அதிகமாகிறது. தயிர் ஒரு ஆன்டாக்சிடென்ட் ஆகவும் செயல்படுகிறது,
தயிரில் நன்மை செய்யும் கொழுப்பு உள்ளதால் இரத்தக் குழாயில் கொழுப்பு படிவதை தடுக்கிறது. மேலும் இரத்த குழாய்கள் பெரிதாவவை தடுக்கிறது. இதனால் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படுகிறது.
தயிர் எளிமையாக செரிமானத்தன்மை கொண்டாக விளங்குவதால் இதில் வயிற்றில் இருக்கும் புண், பெப்டிக் அல்சர் ( குடல் புண்) குணப்படுத்தப்படுகிறது.
இது தோல் வறட்சி, சில தோல் நோய்களுக்கு மேற்பூச்சு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
தோலில் பளபளப்பு தன்மை Skin tone கொண்டதாக மாற்றுகிறது
இது தலையில் தேய்த்து குளிப்பதால் பொடுகு மற்றும் தலையில் ஏற்படும் சரும நோய்கள் நீங்குகிறது.
லேக்டாஸ் ஓவ்வாமை எனப்படும் நோய் இருப்பவர்கள் கூட தயிரினை உண்ணலாம், இதனால் இரைப்பை மற்றும் குடல் பிரச்னைகள் தீர்வு கிடைக்கும்
வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் தயிரை எடுத்துக்கொள்ளலாம் , 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தை களுக்கும் தயிரை வழங்கலாம்
தயிர் உண்பதால் மன அழுத்தத்தினைப் போக்கவும், தூக்கமின்மை போன்ற நோய்களுக்குத் தீர்வாக அமைகிறது.
உடலில் ஏற்படக்கூடிய வெப்பத்தை தணிக்கவும், அதிகமான கார உணவுகளை உண்டபிறகு சம நிலைப்படுத்த தயிர் உண்ணுவது சிறப்பு
சிறுநீரக தொற்றுநோய்களில் இருந்து காப்பாற்றுகிறது
பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய்களை கட்டுப்படுத்துகிறது
மூல நோய்க்கு தயிர் உண்பது சிறப்பு
சித்த மருத்துவ பலன்கள்
பசுவின் றயிராற் பசிமிகவு முண்டாகு
மிசிவுறும் சீரணனோ யாகும்-பசையகன்ற
தாக மிளைப்பிருமல் தாங்கொணா
மெய்யெரிவு
மேகு முலகி லியம்பு.
சித்த மருத்துவ பலன்கள்
பசுவின் தயிரால் பசியுண்டாகும். இசிவு , சீரணரோகம் தாகம் ஆயாசம் காசம் சரீர
எரிச்சல் இவை நீங்கும்.
உண்ணும் முறை
முழு கொழுப்பு உள்ள பாலில் இருந்து எடுக்கப்படும் தயிர் சிறப்பானது, பாக்கெட் பாலையும், பாக்கெட் தயிரையும் தவிர்ப்பது நல்லது.
புரை மோர் விடும்போது மிதமான வெப்பதில் , மண்பாண்டத்தில் இருப்பது சிறப்பு, மேலும் அதிக புளிப்பிலாமல் இருப்பது மிகச்சிறப்பு
இது உணவுக்குப் பின் ஒரு கப் தயிர் முழுமையாக அருந்துவது நல்லது
வெயில் காலங்களில் தயிரில் இனிப்பு கூட்டி லஸ்ஸி சாப்பிடலாம், (சர்க்கரை நோய் உள்ளவர்கள் சர்க்கரை இல்லாமல் சிறிது உப்பு போட்டு சாப்பிடலாம்)
தயிரானது அனைத்துக்காலங்களிலும் எடுத்துக்கொள்ளலாலம் ஆனால் சில விதி விலக்குகள்
1.இரவில் தயிர் உண்ணக்கூடாது.
2.கீரையுடன் தயிர் இணைத்து உண்ணக்கூடாது
3.தயிருடன் நெய் கலந்து உண்ணக்கூடாது
4. சில தோல் நோய் வியாதி உள்ளவர்கள் தயிரை உண்ணக்கூடாது
5. காய்ச்சல், தலைச்சுற்றல் , மஞ்சள் காமாலை , வாந்தி , செரிமானமின்மை , பற் சொத்தை உள்ளவர்கள் தயிரை தவிர்ப்பது நல்லது.
மருத்துவர் பாலாஜி கனகசபை, MBBS, PhD(Yoga)
அரசு மருத்துவர்
கிருஷ்ணகிரி மாவட்டம்
99429-22002