கராச்சி:
மத்தியஅரசு அமல்படுத்தி உள்ள குடியுரிமை திருத்த மசோதாவுக்கு பாகிஸ்தான் நாட்டின் இந்துக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். தங்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்கும் வாய்ப்பை நிராகரித்துள்ளனர்.
அண்டை முஸ்லீம் நாடுகளில் துன்புறுத்தப்பட்ட மத சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்க முற்படும் குடியுரிமை திருத்த மசோதாவின் நகல்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் கராச்சியில் எரித்தனர்.
மத்திய அரசு அமல்படுத்தி உள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவில், பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் சிறுபான்மையினரின் துன்புறுத்தலை மேற்கோள் காட்டி, அவர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. ஆனால், இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை வழங்கப்படாது என்று தெரிவித்து உள்ளது.
இந்த மசோதாவுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், பாகிஸ்தானில் உள்ள இந்து மற்றும் கிறிஸ்தவர்கள் சமூகம் கடும எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து கூறிய பாகிஸ்தான் இந்து கவுன்சிலின் புரவலர் ராஜா அசார் மங்லானி , “இந்த மசோதாவை பாகிஸ்தானில் வசிக்கும் இந்து சமூகம் ஒருமனதாக நிராகரிப்பதாகவும், இது இந்தியாவை வகுப்புவாத அடிப்படையில் பிளவுபடுத்துவதற்கு ஒப்பாகும் என்று கூறி உள்ளார்.
“ஒரு உண்மையான இந்து இந்த சட்டத்தை ஒருபோதும் ஆதரிக்க மாட்டார்,” என்று கூறியவர், இந்த சட்டம் இந்தியாவின் சொந்த அரசியலமைப்பை மீறியுள்ளது என்றும். தங்களின் இந்த முடிவை பிரதமர் மோடிக்கு அனுப்பி இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.
பாக்கிஸ்தானிய நாடாளுமன்றத்தின் மேலவை அல்லது செனட்டின் கிறிஸ்தவ உறுப்பினர் அன்வர் லால் டீன் கூறும்போது, இந்தியா கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம், மத சமூகங்களை ஒருவருக்கொருவர் எதிர்த்து நிற்பதற்கானது என்று தெரிவித்து உள்ளார்.
“இது அடிப்படை மனித உரிமைகளின் தெளிவான மீறலாகும். நாங்கள் அதை திட்டவட்டமாக நிராகரிக்கிறோம், ”என்று தெரிவித்து உள்ளார்.
அதுபோல, பாகிஸ்தானில் உள்ள பாபா குரு நானக்கின் தலைவர் கோபால் சிங்கும், இந்தியா கொண்டு வந்துள்ள குடியுரிமை மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
பாகிஸ்தானின் சிறிய சீக்கிய சமூகமும் சர்ச்சைக்குரிய சட்டத்தை கண்டித்து உள்ளதாகவும், பாகிஸ்தான் சீக்கியர்கள் மட்டுமல்ல, இந்தியா உட்பட உலகின் ஒட்டுமொத்த சீக்கிய சமூகத்தினரும் இந்த நடவடிக்கையை கண்டிக்கின்றனர்” என்று கூறினார்.
“சீக்கிய சமூகம் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் சிறுபான்மையினர். சிறுபான்மையினரின் உறுப்பினராக இருப்பதால், முஸ்லிம் சிறுபான்மையினரின் [இந்தியா] வலியையும் அச்சத்தையும் என்னால் உணர முடிகிறது. இது வெறுமனே துன்புறுத்தல், ”என்றும், சிறுபான்மையினரை “மீண்டும் சுவருக்கு” தள்ள வேண்டாம் என்று சிங் பிரதமர் மோடியை வலியுறுத்துவதாகவும் தெரிவித்து உள்ளார்.
குடியுரிமை சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்து பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாகிஸ்தானில் முஸ்லிம் அல்லாத மக்கள் பல ஆண்டுகளாக ஆபத்தான முறையில் குறைந்துள்ளதாக தெரிவித்தார்.
1947 ஆம் ஆண்டில் பாக்கிஸ்தானின் மக்கள்தொகையில் 23% சிறுபான்மையினர் இருந்த நிலையில், தற்போது அது வெறும் 3.7% ஆக குறைந்துவிட்டது,” என்று அவர் கூறினார், இதன் பொருள் என்னவென்றால், அங்குள்ள சிறுபான்மையினர் கொல்லப்பட்டனர், குடியேறினர் அல்லது தங்கள் மதத்தை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்றும், அங்கு குறைந்து வரும் சிறுபான்மையினருக்கு இந்தியா அடைக்காலம் கொடுக்கிறது என்றும் தெரிவித்தார்.
ஆனால், பாகிஸ்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பில் கிடைத்துள்ள புள்ளிவிவரங்கள், அமித்ஷாவின் கூறுக்கு எதிராகவே உள்ளது.
பாகிஸ்தானில் சிறுபான்மை மக்கள் 23% ஆக ஒருபோதும் இருந்ததில்லை என்றும், 1961 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, முஸ்லிம் அல்லாத மக்கள் தொகை 2.83% ஆக இருந்ததாக பதிவு செய்யப்பட்டு உள்ளது.
ஒரு தசாப்தத்தின் பின்னர் 1972 ல், மக்கள் தொகை கணக்கெடுப்பில் முஸ்லிம் அல்லாத மக்கள் தொகை மொத்த மக்கள்தொகையில் 3.25% ஆக பதிவாகியுள்ளது. அதாவது, இது 0.42% அதிகரித்துள்ளது.
1981 மக்கள் தொகை கணக்கெடுப்பில், முஸ்லிம் அல்லாத மக்கள் தொகை 3.30% ஆக இருந்தது. 1998 இல் மேற்கொள்ளப்பட்ட அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பில், இது மொத்த மக்கள் தொகையில் 3.70% ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.
2017 ல் பாகிஸ்தான் ஒரு புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்திய போதிலும், அதன் மத தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், பாகிஸ்தான் இந்து கவுன்சில் தலைவர் மங்லானியின் கூற்றுப்படி, மொத்தமுள்ளள 210 மில்லியன் மக்களில் 4% இந்துக்கள். கிட்டத்தட்ட 80% இந்துக்கள் – பாகிஸ்தானின் மிகப்பெரிய சிறுபான்மையினர் – சிந்து மாகாணத்தின் தெற்குப் பகுதியில் வசிக்கின்றனர் என்றும் தெரித்துள்ளார்.
இந்திய அரசின் இந்த நடவடிக்கையை பாகிஸ்தான் அரசும் கடுமையாக கண்டித்துள்ளது. பாரதீய ஜனதா தலைமையிலான இந்தியாவின் அரசாங்கம் “இந்துத்துவ மேலாதிக்கத்தின்” சித்தாந்தத்திற்கு கட்டுப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளது.
“மோடி அரசாங்கம் இந்துத்துவ மேலாதிக்க சித்தாந்தத்திற்கு இணங்க சிறுபான்மையினரின் உரிமைகளை குறைத்து குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது” என்று வெளியுறவு மந்திரி ஷா மஹ்மூத் குரேஷி திங்களன்று தொடர் ட்வீட்டுகளில் தெரிவித்தார்.
“காஷ்மீரை சட்டவிரோதமாக இணைத்தல், [இந்துக்களுக்கு] பாப்ரி மஸ்ஜித்தை ஒப்படைத்தல், மற்றும் முஸ்லிம்களை ஒதுக்கி வைக்கும் குடியுரிமை திருத்த மசோதா ஆகியவை சிறுபான்மையினரை அடிமைப்படுத்துவதை இலக்காகும் என்றும் தெரிவித்து உள்ளது.
நன்றி:https://tribune.com.pk/