சோச்சி, ரஷ்யா
தாம் கண்டுபிடித்த கருவிக்காக ரஷ்ய அதிபரின் பாராட்டை ஒரிசாவைச் சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவர் பிஸ்வந்த் பாத்ரா பெற்றுள்ளார்.
ரஷ்ய அரசின் சிரியஸ் அமைப்புடன் இணைந்து நிதி அயோக் ஒரு புதிய தொழில் நுட்பக் கல்வித் திட்டத்தை நடத்தியது. இந்த திட்டம் முழுவதும் செய்முறை வடிவமாகும். இந்த திட்டப் பயிற்சியில் 25 இந்திய மாணவர்களும் 25 ரஷ்ய மாணவர்களும் கலந்துக் கொண்டனர். அதில் ஒரிசா மாநிலம் பெர்ஹாம்பூர் பகுதியைச் சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவர் பிஸ்வந்த் பாத்ராவும் ஒருவர் ஆவார்.
இந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு மாணவரும் தொழில் நுட்பம், தகவல் நுட்பம், பயோடெக், ஆளில்லா விமானங்கள் ரோபோக்கள் உள்ளிட்ட பலவற்றைக் கண்டறிந்து அதைக் காட்சிக்கு வைத்தனர். அதை ரஷ்ய அதிபர் விளாடிமின் புதின பார்வை இட்டார்.
ஒரிசா மாணவர் பாத்ரா புதிய நீர் வழங்கல் கருவி ஒன்றைக் கண்டுபிடித்து அதைக் காட்சிக்கு வைத்திருந்தார். இந்த கருவி ரஷ்ய அதிபர் புதினை மிகவும் கவர்ந்தது. இது குறித்த விவரங்களை அவர் பாத்ராவிடம் ஆர்வமாகக் கேட்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதையொட்டி ஒரிசா முதல்வர் நவீன பட்நாயக் இந்த விவரங்களை வெளியிட்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.