சென்னை:
எகிப்து வெங்காயத்தில் சல்பர் அதிகமாக உள்ளதால் இதயத்துக்கு நல்லது என்று அமைச்சர் செல்லூர் ராஜுவின் தெரிவித்து உள்ளார். இது கடுமையான விமர்சனங்களை உருவாக்கி வருகிறது.
மகாராஷ்டிரா, கா்நாடகத்தில் இந்த ஆண்டு கொட்டி தீா்த்த கனமழையால் வெங்காயம் உற்பத்தி குறைந்தது. இதனால் நாடு முழுவதும் வெங்காயம் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை பல மடங்கு உயர்ந்தது. வெங்காயம் கிலோ 200 ரூபாய் வரை விற்பனையானது.
வடமாநிலங்களில் கொட்டித்தீர்த்த மழை காரணமாக வெங்காயப்பயிர்கள் அழுகி நாசமானதால், நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை ஜென் வேகத்தில் உயர்ந்தது. கிலோ ரூ.200 ஐ தாண்டி விற்பனை செய்யப்பட்டது.
இதையடுத்து, வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை மத்தியஅரசு இறக்குமதி செய்து மாநிலங்களுக்கு அனுப்பி வைத்தது. அதன்படி, எகிப்து நாட்டிலிருந்து சுமார் 30 டன் வெங்காயம் திருச்சிக்கு வந்து சேர்ந்தது.அங்கிருந்த மாவட்டங்களுக்கு லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறத.
இந்த நிலையில், எகிப்து வெங்காயம் கிலோ ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த வெங்காயம் அளவில் பெரியதாக இருப்பதாலும், ஒரு வெங்காயத்தின் எடை 400 கிராம் என்ற அளவில் இருப்பதாலும், பொதுமக்களிடையே எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு இல்லை. மேலும், இந்த வெங்காயம் நமது நாட்டு வெங்காயம் போன்று மணம் வீசவில்லை என்றும், சுவையற்றும் உள்ளதாக இல்லத்தரசிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இதன் காரணமாக இந்த வெங்காயம் எதிர்பார்த்த அளவுக்கு விற்பனை ஆகாத நிலையில், தெர்மோகோல் புகழ் அமைச்சர் செல்லூர் ராஜு, எகிப்து வெங்காயத்தின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் அதிரடி கருத்துக்களை தெரிவித்து உள்ளார்.
எகிப்து வெங்காயத்தில் சல்பர் அதிகமாக உள்ளது என்றும், இதனால், காரம் தூக்கலாக இருக்கிறது என்று தெரிவித்தவர், அடுத்த படியாக, இந்த வெங்காயம் சாப்பிடுவது இதயத்திற்கு நல்லது என்று கூறியதுடன், இந்த எகிப்து வெங்காயத்தின் தன்மையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியே அறுத்து சாப்பிட்டு பரிசோதனை செய்துள்ளதாகவும் அதிரடியாக கூறி அசர வைத்துள்ளார்.
அமைச்சர் செல்லூர் ராஜூவின் இந்த கருத்து சமுக வலைதளங்களில் கடுமையாக விமர்சனங் களை எழுப்பி உள்ளது.
ஏரியின் நீர் ஆவியாகாமல் தடுக்க அதன்மீது தெர்மோகோல் போட்டு தடுக்க நினைத்த புத்திசாலி அமைச்சர், தறபோது, எகிப்து வெங்காயம் சாப்பிட்டால் இதயநோய் வராது என்பதையும் கண்டு பிடித்துள்ளார்போல…. என்று நக்கல் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்…