சென்னை:

த்தியஅரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு தமிழக  திரையுலக பிரபலங்கள் பலர் கண்டனம் தெரிவித்து உள்ளனர். பிரபல நடிகர் சித்தார், தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர்  பிசிஸ்ரீராம் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

மத்தியஅரசு கொண்டுவந்துள்ள புதிய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவில், இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள வெளிநாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை வழங்கப்படாது என்றும், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய பகுதிகளிலி ருந்து வந்திருக்கும் இந்து, சீக்கியர், கிறித்துவர், பார்சி, புத்தம், ஜெயின மதம்  சார்ந்த மக்கள் 2014 டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்னர் இந்தியாவுக்கு வந்திருந்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என தெரிவித்து உள்ளது.

இந்த மசோதாவுக்கு காங்கிரஸ், திமுக உள்பட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.  தி.மு.க எம்.பிக்கள் தயாநிதி மாறன், கனிமொழி உள்பட  காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் கடுமையான கண்டனத்தையும் எதிர்ப்புக் குரலையும் மக்களவையில் முன்வைத்தனர்.

வடகிழக்கு மாநிலங்களான அசாம், அருணாச்சல பிரதேச மக்கள் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த மசோதாவுக்கு தமிழ்  திரையுலகத்தினர் மத்தியிலும்   பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில், தமிழ் உள்ளிட்ட இந்திய சினிமா உலகின் பிரபல ஒளிப்பதிவாளரான பி.சி.ஸ்ரீராம் தனது டிவிட்டர் பக்கத்தில்,    #CitizenshipBill என்ற ஹேஷ்டேக்கை குறிப்பிட்டு அவர்கள் நம்மைப் பிரிக்கப் பார்க்கிறார்கள் என பா.ஜ.க.வை சாடியுள்ளார். மேலும், “சிஸ்டத்தின் (சட்டம்) மீதான நம்பிக்கை குறைந்து வருகிறது. அவர்களின் அகங்காரம் ஒவ்வொரு செயலிலும் வெளிப்படுகிறது. ஆனால் நமது மதச்சார்பற்ற மனப்பான்மை உறுதியான ஒன்று. அது என்றும் உறுதியாகச் செயல்படும்” என பி.சி.ஸ்ரீராம் பதிவிட்டுள்ளார்.

அதுபோல நடிகர் சித்தார்த்தும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், என்னுடைய மாநிலத்துக்கும் என்னுடை மக்களுக்கும் எடப்பாடி பழனிசாமி பிரதிநிதியாக இருப்பதற்கு நான் மிகவும் அவமானப்படுகிறேன். குடியுரிமைச் சட்ட மசோதாவுக்கு ஆதரவு அளித்ததன் மூலம் அவரின் உண்மையான நிறம், அவருடைய நேர்மையின் அளவு, எந்த விலை கொடுத்தாவது ஆட்சியைத் தக்கவைக்கவேண்டும் எண்ணம் தெரியவந்துள்ளது. இந்த சட்டத்தை  ஜெயலலிதா ஒருபோதும்  ஆதரிக்கமாட்டார். என்று தெரிவித்து உள்ளார்.