புதுடெல்லி: தண்ணீரின் தரம் குறித்து உலகின் 122 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியாவுக்கு 120வது இடம் கிடைத்துள்ளது. அந்த ஆய்வை நடத்தியது நிதி ஆயோக் அமைப்பு.

தனது ஆய்வுகுறித்து நிதி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; நாட்டில் மொத்தம் 60 கோடி மக்கள் தண்ணீர் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளனர். உலகின் 122 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்தியாவுக்கு 120வது இடம் கிடைத்துள்ளது.

இதன்படி, இந்தியாவில் கிடைக்கும் நன்னீரில் சுமார் 70% அளவிற்கு மாசுபட்டுள்ளது.

ஐந்தாவது நீர்ப்பாசனக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 20.52 மில்லியன் கிணறுகள் உள்ளன. இவற்றில் தோண்டப்பட்டவை, ஆழமற்றவை மற்றும் ஆழமானவை மற்றும் நடுத்தர குழாய் கிணறுகள் போன்றவை அடக்கம் என்று கூறப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் விளக்கமளித்த மத்திய நீர்வள அமைச்சர் கஜேந்திர சிங், நாட்டின் 256 மாவட்டங்களைச் சேர்ந்த 1500 பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாகவும், இதனை சமாளிக்க தனியானக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.