டெல்லி:

பிரபல உச்சநீதிமன்ற பெண் வழக்கறிஞர் லில்லி தாமஸ் வயது முதிர்வு காரணமாக காலமானார். அவருக்கு வயது 91.

கேரளாவைச் சேர்ந்த வழக்கறிஞர்  லில்லி தாமஸ், சென்னை சட்டக் கல்லூரியில் பயின்றவர். சட்டத்தில் முதுகலை பட்டம் பெற்ற முதல் இந்திய பெண் என்ற பெயர் பெற்றவர்.

இவர் தொடர்ந்த வழக்கு மற்றும் வாதங்களால்தான், குற்ற வழக்கில் தண்டனை பெற்ற எம்பி, எம்எல்ஏக்கள் உடனடியாக தகுதியிழக்கிறார்கள். அவர்களின் பதவி பறிக்கப்படும் என்றும்  தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர்கள் என்றும்  உச்சநீதிமன்றம் சரித்திர புகழ்மிக்க இந்த தீர்ப்பை  கடந்த 2013ம் ஆண்டு கூறியது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தை ரத்து செய்தது.

இதற்காக லில்லி தாமசுக்கு கேரளாவில்  தங்கப்பதக்கம் வழங்கி கவுரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

வயது முதிர்வு காரணமாக உடல்நிலை குன்றியிருந்த லில்லி தாமஸ் தனது 91வயதில் இன்று காலமானார்.