Bryonia Epigoea
கருடன் கிழங்கு
(Bryonia Epigoea). ஆகாஸ்காடா (Akasgaddah) என்ற பெயரில் இந்தியில் அழைக்கப்படுகிறது
நம் நாட்டின் மழைக்காடுகளில் சித்தர்களால் மருத்துவத்தில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இது கிழங்கு வகையைச் சார்ந்தது
சித்தர் பாடல்
துட்டவிஷம் பாண்டுவெப்பு சூலைவா தங்கிரந்தி
குட்ட மரிப்பக்கி கோண்குடனேய்- கெட்டகண்ட
மாலைபோங் கொல்லன்கோ வைக்கிழங்கால் முத்தோஷ
வேலைப்போம் பாரில் விளம்பு.
பொது பலன்
வலி நிவாரணியாகவும், வீக்கத்தை குறைக்கவும் மருந்தாகப் பயன்படுகிறது. இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைப்பதற்கும் பயன்படுகிறது, கல்லீரலில் உள்ள SGPT, SGOT என்ற நொதியை சம நிலைப்படுத்துகிறது. அழகு சார்ந்த பொருட்களிலும் , சில ஹோமியோபதி மருந்துக்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக தோல் சம்பந்தப்பட்ட நோய்களை கருடன் கிழங்கு சரி செய்ய பயன்படுகிறது.
வீடுகளில் ஆன்மீக சம்பந்தப்பட்ட வழிப்பாட்டிற்கும் பூஜைகளுக்கும், வழிப்பாட்டிற்கும் , திருஷ்டிக்காகவும் வீட்டு வைத்துக்கட்டும் வழக்கம் இன்றும் இருந்துவருகிறது.
பாம்பு வராமல் தடுக்கவும் இந்த கிழங்கு உதவுகிறது.
சித்த மருத்துவல் பலன்
அனைத்து விதமான சர்பங்களுக்கும் இதைக் கண்டால் நடுங்கும் என்பது சித்தர் வாக்கு, பாம்பு கடிக்கான விஷமுறிவு மருந்தை இதைக்கொண்டு தயாரித்தார்கள். இதைக்கொண்டு எவ்வளவு பெரிய விசமானலும் (மகாவிசம்) இறங்கும்.
வெள்ளை, வெண்புள்ளி, சொறி, சிரங்கு, பெருவியாதி, நமைச்சல் ,கண்டமாலை, குடல் வலி, திரிதோஷம், வெண் குஷ்டம், குஷ்டம், மேக கர்ணம் போன்ற நோய்களை குணப்படுத்த கருடக்கிழங்கு பயன்படுகிறது.
பயன்படுத்தும் முறை
கருடன்கிழங்கு, குப்பைமேனி, அவுரி, ஆவாரை, கீழா நெல்லி, இவைகளை இடித்து சாறு பிழிந்து உடம்பில் தடவி வர பாம்பின் விஷம் இறங்கும் என்பது சித்தர்கள் வாக்கு . கருடன் கிழங்கு எண்ணெய் ஆகவும் காய்ச்சி தோல் நோய்களுக்கு உள்மருந்தாகவும் எடுத்துக்கொண்டால் மேற்கண்ட நோய்கள் தீரும். இதற்கு உரிய சித்த மருத்துவர்களை அணுகி அவர்களின் ஆலோசனை பெற்று பயன்படுத்தவும்.
இதை ஆலோசனை இல்லாமல் உட்கொண்டால் சிறுநீர பிரச்னை ஏற்படும் வாய்ப்புள்ளது
எனவே மருத்துவர்களின் முறையான ஆலோசனை இங்கே அவசியம்
https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3336459/pdf/ASL-19-25.pdf
மருத்துவர் பாலாஜி கனகசபை, MBBS, PhD(Yoga)
அரசு மருத்துவர்
கிருஷ்ணகிரி மாவட்டம்