ண்டன்

நேட்டோ தலைவர்கள் மாநாட்டில் கலந்துக் கொள்ள லண்டன் சென்றுள்ள அமெரிக்க அதிப்ர் டிரம்ப் திட்டமிட்டதற்கு முன்னதாகவே அங்கிருந்து கிளம்புகிறார்.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தற்போது நேட்டோ நாடுகளின் தலைவர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது.  இதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரஞ்சு நாட்டு அதிபர் இமானுவேல் மாக்ரோன், கனடா பிரதமர் ஜஸ்டின் டுருடோ உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்துக் கொள்கின்றன     இந்த சந்திப்பின் போது டிரம்ப்பை மற்ற தலைவர்கள் தாக்கி பேசிய வீடியோ ஒன்று வெளியானது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்னும் சில சந்திப்புக்களை நிகழ்த்த உள்ளதாகவும் இந்த மாநாடு முடிந்த  பிறகு ஒரு செய்தியாளர் சந்திப்பில் கலந்துக் கொண்ட பிறகு வாஷிங்டன் செல்ல உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.  இந்த நிலையில்  தன்னை மற்ற தலைவர்கள் தாக்கிப் பேசிய வீடியோவைக் கண்டு அவர் கோபம் அடைந்துள்ளார்.

இதையொட்டி அவர் உடனடியாக நாடு திரும்ப திட்டமிட்டுள்ளார்.   அவர் தனது டிவிட்டரில், “இன்றைய கூட்டம் முடிந்த பிறகு  உடனடியாக வாஷிங்டன் திரும்ப உள்ளேன்.  நாங்கள் ஏற்கனவே பல கூட்டு அறிவிப்புக்களை நேட்டோ மாநாட்டில் வெளியிட்டுள்ளோம்.   எனவே இறுதியில் இன்னொரு செய்தியாளர் சந்திப்பு நடத்தத் தேவை இருக்காது” எனக் கூறி உள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த பிறகு  பிரஞ்சு அதிபர் இமானுவேல் மாக்ரோன் மற்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் டுருடோ ஆகிய இருவரையும் டிரம்ப் அனைவர் முன்னிலையிலும் கடுமையாகச் சாடி உள்ளார்.  குறிப்பாக கனடா பிரதமர் ஜஸ்டின் டுருடோ இரண்டு முகங்களைக் கொண்டவர் எனத் தெரிவித்துள்ளார்.