டோக்கியோ

டோக்கியோவில் வரும் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியின் பாதுகாப்புக்காக  இந்திய ராணுவம் ஜப்பான் ராணுவத்தினர்க்கு பயிற்சி அளிக்க உள்ளனர்

வரும் 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஜப்பான் தலைநகர டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன்.    இதில் பல நாட்டைச் சேர்ந்த மக்களும் விளையாட்டு  வீரர்களும் பெருமளவில் கலந்துக் கொள்வார்கள் எனவே அந்த சமயத்தில் தீவிரவாத தாக்குதல்கள் நடைபெறலாம் எனப் புலனாய்வுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையொட்டி ஜப்பான் ராணுவம் இந்திய ராணுவத்தின் உதவியை நாடி உள்ளது.   ஏற்கனவே காஷ்மீர் பகுதியில் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில்  இந்திய ராணுவம் ஈடுபட்டு வருகிறது    இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் ஜப்பான் செல்லும் போது  அங்கு அவர் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் டாரோ கானோவை சந்தித்து இது குறித்துப் பேச உள்ளார்.

ராவத் தனது ஜப்பான் பயணத்தை முடித்த உடன் இரு நாட்டு வீரர்களும் இணைந்து தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை எடுக்கும் பயிற்சி முகாமில் கலந்து கொள்ள உள்ளனர்  இந்த பயிற்சி முகாமில் இந்திய ராணுவத்தினர் ஜப்பான் ராணுவத்தினருக்குப் பயிற்சி அளிக்க உள்ளனர்.