லிபோர்னியா

மெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து இந்திய வம்சாவளியினரான கமலா ஹாரிஸ் பிரசாரத்துக்கு பணம் இல்லையெனக் கூறி விலகியுள்ளார்

வரும் 2020 ஆம் ஆண்டு இறுதியில் தற்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பதவிக் காலம் முடிவதையொட்டி அதே வருடம் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்க உள்ளது.   இதில் ரிபப்ளிக் கட்சி சார்பாக டிரம்ப் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.

டெமாக்ரடிக் கட்சி சார்பாக அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் மற்றும் மற்றொரு இந்திய வம்சாவளியினரான துளசி கப்பார்ட் ஆகியோர் போட்டியிட உள்ளனர்.  இந்த மூவரில் ஒருவர் டெமாக்ரடிக் கட்சியின் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார்.

இவ்வாறு தேர்வு செய்ய அங்குள்ள 50 மாநில மக்கள் யாரை விரும்புகின்றனர் என்பதும் அவரால் தேர்தல் செலவுக்காக எவ்வளவு நிதி திரட்ட முடியும் என்பதைப் பொருத்து கட்சி முடிவு செய்யும்.  இந்திய வம்சாவளியினரான கமலா ஹாரிஸ் முதலில் ஆதரவில் முதல் இடத்தில் இருந்தார். தற்போது ஆதரவு குறைந்துக் கொண்டே வந்து 3% ஐ எட்டி உள்ளது.

இதனால் அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து இந்திய வம்சாவளியினரான கமலா ஹாரிஸ் விலக உள்ளார்.  அவர் தாந்துஜ் டிவிட்டரில் ”நான் இத்துடன் என பிரசாரத்தை முடித்துக் கொள்கிறேன்.   ஆயினும் நான் எத்தகைய குறிக்கோளுக்காகப் பிரசாரத்தில் இயங்கினேனோ அதற்காக தொடர்ந்து செயல் படுவேன்.  எனக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி” என பதிந்துள்ளார்.

மேலும் அவர், “என்னிடம் பிரசாரம் செய்ய போதுமான பணம் கிடையாது.  நான் பலவிதத்தில் யோசித்தேன்.   எனக்குத் தேர்தலில் செலவு செய்யக் கடந்த சில நாட்களாக பணம் வரவில்லை  அதனால் பல பிரச்சினைகள் வந்தன.  நிச்சயமாக நான் கோடீஸ்வரி இல்லை  அதனால் என்னால் அதிக அளவில் செலவு செய்ய இயலாது.

யாருமே எனக்குத் தேர்தல் செலவுக்காக நிதி அளிக்கவில்லை.  ஆகவே நான் இந்த போட்டியில் இருந்து விலகுகிறேன்.   அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  எனக்கு உங்கள் ஆதரவும் பெரும் சக்தியைக் கொடுத்தது.  அதற்கும் எனது நன்றிகள்” எனக் கூறி உள்ளார்.

சென்னையைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் தற்போது அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளார்.  இவர் தனது குழந்தைப் பருவத்தைச் சென்னையில் உள்ள பெசண்ட் நகரில் கழித்துள்ளார்.  இவர் சென்னையை சேர்ந்த தமிழ்ப் பெண்ணுக்கும் ஜமைக்காவைச் சேர்ந்த தந்தைக்கும் பிறந்தவர் ஆவார்.  இவர் தனது குடுமத்தினருடன் கலிபோர்னியாவில் இப்போது வசித்து வருகிறார்.