கொல்கத்தா: கொல்கத்தாவில் வெங்காயத்தின் விலை கிலோ 150 ரூபாயை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில வாரங்களாக முன் எப்போதும் இல்லாத நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. கிலோ 30 ரூபாய் என்று இருந்த வெங்காயம் சதத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது.
வடமாநில மழை, அதனால் ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக தமிழகத்தில் விலை ஜெட் வேகத்தில் ஏறிக் கொண்டிருக்கிறது. மற்ற நகரங்களை காட்டிலும் கொல்கத்தாவில் விலை எங்கோ போய் கொண்டிருக்கிறது.
கிலோ 130 வரை போன வெங்காயம் விரைவில் 150ஐ எட்டும் என்று வணிகர்கள் தெரிவித்து இருக்கின்றனர். நாசிக்கில் 40 கிலோ கொண்ட வெங்காயம், 5.400க்கு விற்பனையாகிறது. சராசரியாக 135 ரூபாய் என்ற அளவில் இருக்கிறது.
வரும் ஜனவரியிலாவது அதன் விலை குறையும் என்று எதிர்பார்க்கிறோம் என்று வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேற்கு வங்கத்தில் வெங்காய விலையை குறைக்க மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, வெங்காய விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதியை தடை செய்திருக்கிறது. மேலும் துருக்கியில் இருந்து 11,000 டன் வெங்காயத்தை இறக்குமதி செய்கிறது.