சென்னை: திமுகவின் 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தல் வெற்றிக்காக களம் இறங்குகிறார் பிரஷாந்த் கிஷோர்.

2014ம் ஆண்டு பாஜகவுக்கு தேர்தல் பாதையை அமைத்துக் கொடுத்தவர் பிரஷாந்த் கிஷோர். அதன்பிறகு நிதிஷ்குமாருடன் கைகோர்த்தார். ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி முதலமைச்சராக திட்டம் வகுத்து கொடுத்தார்.

பஞ்சாபில் காங்கிரஸ் வெற்றி பெற காரணமாக இருந்தார். அவரது ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்களின்படி, அம்ரிந்தர் சிங் முதலமைச்சராகி இருக்கிறார். அண்மையில் நடந்த மகாராஷ்டிரா தேர்தலின் போது சிவசேனாவின் ஆதித்யா தாக்கரேவை சந்தித்து இருக்கிறார்.

இப்போது 2021ம் ஆண்டு திமுகவின் சட்டசபை தேர்தல் வெற்றிக்காக களம் இறங்க உள்ளார். அதற்காக அக்கட்சி தலைவர் ஸ்டாலினை அவர் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தி இருக்கிறார்.

இந்த தகவலை திமுகவின் உயர்மட்ட தலைவர் உறுதி செய்திருக்கிறார். பிரஷாந்த் கிஷோரும், அவரது நண்பருமான சுனில் இப்போது இல்லை. அவர் வெளியேறிவிட்டார். எப்படியும் 2021ம் ஆண்டு ஆட்சியை பிடித்துவிடுவது என்று திமுக முனைப்புடன் இருக்க, கிஷோரின் வியூகம் எப்படி இருக்கும் என்பது தெரியவில்லை.