தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சஞ்சனா ஹைதராபாத் மந்தாப்பூரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தெலங்கானா முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், பாஜக இளைஞரணியைச் சேர்ந்தவருமான நந்தேஷ்வர் கவுடுவின் மகன் ஆஷிஷ் கவுடு பாலியல் தொல்லை கொடுத்ததாக போலீசில் புகாரளித்துள்ளார்.

சஞ்சனாவின் புகாரின் பேரில் ஆஷிஷ் கவுடு மற்றும் அவரது நண்பர்கள் மீது இரண்டு பிரிவுகளில் மந்தாப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஹோட்டலில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தலைமறைவாக இருக்கும் ஆஷிஷ் கவுடு சஞ்சனா புகாரின் பின்னணியில் அரசியல் உள்ளதாகவும், விரைவில் போலீசில் ஆஜராகி உண்மையை தெரிவிப்பேன் என்றும் கூறியுள்ளார்.
Patrikai.com official YouTube Channel