
மாதாபூர்: பாஜகவின் இளைஞர் தலைவரும், தெலுங்கானாவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான நந்தேஷ்வர் கவுதின் மகனுமான ஆஷிஷ் கவுத் பிக்பாஸ் பெண் போட்டியாளரான ஒருவரிடம் பாலியல் ரீதியான வன்முறையில் ஈடுபட்டதாக குற்றப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆஷிஷ் பாரதிய ஜனதா யுவமோர்ச்சாவின் உறுப்பினராவார். ஆஷிஷின் தந்தையான நந்தேஷ்வர் 2009 இல் காங்கிரஸ் கட்சியில் எம் எல் ஏ வாக இருந்து பின்பு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து அதன்பின் தெலுங்கு தேசம் கட்சியில் தற்போது உள்ளார்.
இவர், சமூக ஊடகங்களின் பிரியங்காவிற்கு ஏற்பட்ட கொடூரத்திற்கு மனம் வருந்தி குற்றவாளிகளை தப்பிக்கவே விடக்கூடாது, இனியும் பேரணிகளும்,மவுன அஞ்சலியும், மெழுகுவர்த்தி ஏற்றலுமாக கடந்து விடாது ஒரு முடிவுக்குக் கொண்டு வரவேண்டுமென்று கருத்து தெரிவித்திருக்கிறார்.
அதன் பின்பு போராட்டத்திலும் கலந்து கொண்டிருக்கிறார். இதனையும் சமூக ஊடகத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். அதற்கு பின் சிலமணிநேரங்களில் இந்த புகாரினை 27 வயது கொண்ட பெண் அளித்துள்ளார்.
இந்த சம்பவம் ஹோட்டல் ஒன்றில் நடந்ததாக தெரிகிறது. அந்த பெண் தமது நண்பிகளுடன் இசையை கேட்டு ரசித்துக் கொண்டிருந்ததாகவும் அங்கு ஆஷிஷ் தமது நண்பர்களுடன் வந்து ஆபாசமாக பேசியவாறு கைகளைப் பிடித்து முறைதவறி நடந்த்தாகவும் புகாரில் அவர் கூறியுள்ளார்.
அதற்கு ஆஷிஷ், அவ்வாறு எதுவும் நடக்கவில்லை என்றும் தற்போது இவ்வாறு புகார் அளிப்பது வழக்கமாகி வருகிறது என்றும் கூறியுள்ளார். காவல் துறையைப் பொருத்தமட்டில் குற்றவாளி தலைமறைவான நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
[youtube-feed feed=1]