’தேவதையை கண்டேன்’ சீரியல் ஈஸ்வர் மற்றும் ’வம்சம்’ சீரியல் வில்லி நடிகை ஜெயஸ்ரீயும், கடந்த சில வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்கள். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், ’தேவதையை கண்டேன்’ சீரியலில் வில்லியாக நடித்து வரும் நடிகை மகாலஷ்மியுடன் காதலாகி ஜெயஸ்ரீயிடம் விவாகரத்து கேட்டு ஈஸ்வர் சண்டைபோட்டு வந்துள்ளார் .

இதனால் நடிகை ஜெயஸ்ரீ போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து ஈஸ்வரையும், அவரது அம்மாவையும் போலீசார் கைது செய்துள்ளனர். பிறகு அவரது அம்மாவை ஜாமீனில் விடுவித்த போலீசார், ஈஸ்வரை மட்டும் சிறையில் அடைத்திருப்பதாக கூறப்படுகிறது.
Patrikai.com official YouTube Channel