
‘அவள்’ சீரியல் மூலமாக அறிமுகமாகி தற்போது ‘நந்தினி’ சீரியல் மூலம் பிரபலமான நித்யா ராமுக்கும், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தொழிலதிபரான கவுதமுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
இதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. திருமணம் செய்துகொண்டு ஆஸ்திரேலியாவில் குடியேறத் திட்டமிட்டுள்ளார் நித்யா ராம்.
இருவரது திருமணமும் விரைவில் நடைபெறவுள்ளது. முன்பாக, 2014-ம் ஆண்டு வினோத் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார் நித்யா ராம். இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel