மும்பை: எம்.எஸ்.கே. பிரசாத்தின் தலைமையிலான தேர்வுக்குழுவின் பதவிக்காலம் 1ம் தேதி முடிவடைந்தது. பி.சி.சி.ஐ தலைவர் கங்குலி, “உங்களின் பதவிக்காலத்தைத் தாண்டிச் செல்ல முடியாது“, என்று கூறியதன் மூலம், இவ்விஷயம் உறுதியானது.
பழைய அரசியலமைப்பின் படி தேர்வுக் குழுவுக்கு அதிகபட்சம் நான்கு ஆண்டு காலக் கெடு உள்ளது, ஆனால் திருத்தப்பட்ட அரசியலமைப்பில் அதிகபட்சமாக ஐந்தாண்டு ஆண்டு காலக் கெடு உள்ளது. கங்குலி தலைமையிலான பி.சி.சி.ஐ பழைய அரசியலமைப்பை படி நிற்பதால், தற்போதைய தேர்வுக்குழுவின் பதவிக்காலம் முடிவுக்கு வந்துள்ளது.
2015 இல் நியமிக்கப்பட்ட பிரசாத் மற்றும் ககன் கோடா ஆகியோர் புதிய உறுப்பினர்களுக்கு வழிவகுப்பார்கள் என்றும்அவர்கள் ஒரு நல்ல வேலையைச் செய்திருக்கிறார்கள் என்றும் பி.சி.சி.ஐயின் 88 வது வருடாந்திர பொதுக் கூட்டத்திற்குப் பிறகு கங்குலி கூறினார்.
2016 இல் இணைந்த ஜடின் பரஞ்ச்பே, சரந்தீப் சிங் மற்றும் தேவாங் காந்தி ஆகியோர் அந்தந்த பதவிக்காலங்களில் இன்னும் ஒரு வருடம் மீதமுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தேர்வாளர்களை நியமிப்பதை விட அவர்களுக்கு ஒரு பதவிக்காலத்தை நிர்ணயிப்பது சிறந்ததெனக் கருத்துக் கூறப்பட்டது.
ஐவர் குழுவின் பதவிக்காலத்தின் போது இந்திய அணி, இந்த ஐவர் குழுவின் பதவிக்காலத்தின் போது வெற்றியை அனுபவித்திருந்தாலும், அவர்களின் வரையறைக்குட்பட்ட சர்வதேவ கிரிக்கெட் வாழ்க்கைக் காரணமாக இடைவிடாத விமர்சனங்களைப் பெற்றிருக்கிறது.