
தமிழ் திரையுலகில் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நமீதா.
தமிழ் தொடர்ந்து மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிப் பபடங்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானவர் .
கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி மறைந்த முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். ஆனாலும் அரசியல் பொதுக்கூட்டங்களிலோ, பிரசாரக் கூட்டங்களிலோ அதிகம் தலைகாட்டவில்லை.
இந்நிலையில் இன்று சென்னையில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வருகை தந்துள்ள பாஜகவின் செயல்தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் நடிகை நமீதா பாஜகவில் இணைந்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel