
நடிகர் ஷான் நிகம், ஷூட்டிங் தளத்தில் போதை மருந்து உட்கொண்டு பிரச்சினை செய்ததால் அவரை இனி எந்த திரைப்படங்களிலும் ஒப்பந்தம் செய்ய கூடாது என மலையாள திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.
மேலும் ஷான் நிகத்தை மலையாள சினிமாவில் தடை செய்வதாகவும் தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.
இதனால் தயாரிப்பில் இருக்கும் வெயில் மற்றும் குர்பானி என இரண்டு படங்கள் இவரால் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஷான் நிகம் 7 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் நிர்பந்தித்துள்ளது.
Patrikai.com official YouTube Channel