மும்பை:

காராஷ்டிரா மாநில முதல்வராக பதவி ஏற்றுள்ள சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று முதல்வர் அலுவலகம் சென்று தனது பணியை தொடங்கினார்.

முன்னதாக முதல்வரர் அலுவலகம் அமைந்துள்ள மந்திராலயத்தின் 1வது மாடியில் உள்ள தனது அறைக்குள் நுழைவதற்கு முன்பு தனது அலுவலகத்தின் வாசலை தொட்டு வழங்கிவிட்டு உள்ளே நுழைந்தார். பின்னர் தனது பணியை ஏற்றார். தனது முதல் உத்தரவாக ஆரே பகுதியில்  மரங்களை வெட்ட தடை விதிக்கும் ஆணையில் கையெழுத்திட்டார்.

மகாராஷ்டிரத்தில் சிவசேனை-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் இணைந்து அமைத்துள்ளது. முதல்வராக உத்தவ் தாக்கரே நேற்று முன்தினம் பொறுப்பேற்ற நிலையில், நேற்று  தலைமைச் செயலகத்துக்குச் சென்று முதல்வா் அலுவலகப் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டாா்.

அதைத்தொடா்ந்து, தனது முதல் உத்தரவாக,  ஆரே காலனியில் மரங்களை வெட்டுவதற்கு தடை விதித்தார்.

உத்தவ் தாக்கரேவுடன் அவரது மகனும், எம்எல்ஏவுமான ஆதித்ய தாக்கரே, சிவசேனை மூத்த எம்எல்ஏக்கள் வந்திருந்தனா்.

மும்பையில் மெட்ரோ ரயில் நிலையத்துக்கான பணிமனை அமைக்க ஆரே காலனி பகுதியில் உள்ள மரங்களை வெட்ட முந்தைய பாஜக அரசு உத்தரவிட்டது. வடக்கு மும்பை பகுதியின் சஞ்சய் காந்தி தேசியப் பூங்கா அருகேயுள்ள ஆரே காலனி, மும்பை மாநகரின் அருகே அமைந்துள்ள மரங்கள் அடா்ந்த பகுதியாகும். அப்பகுதியில் சுமாா் 2,600 மரங்களை வெட்ட சில மாதங்களுக்கு முன்பு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, பல்வேறு இயற்கை ஆா்வலா்கள் மற்றும் சமூக நல அமைப்பினா் இதற்கு எதிா்ப்பு தெரிவித்தனா். மும்பை நகரில் எதிா்ப்புப்பரணிகள், போராட்டங்களும் நடைபெற்றன. இந்த விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றத்திலும் வழக்கு உள்ளது. இதனால் ஆரே காலனியில் மரங்களை வெட்ட தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய உத்தவ் தாக்கரே,  மும்பை நகரம் தனிச்சிறப்பு வாய்ந்த நகரமாகும். இங்கு  வளா்ச்சி என்ற பெயரில் நகரில் உள்ள மரங்களை ஒட்டுமொத்தமாக வெட்டுவதற்கு அனுமதிக்க முடியாது.

நான் மாநிலத்தின் வளா்ச்சிப் பணிகளுக்கு எதிரானவனல்ல. ஆனால், இத்தனை மரங்களை வெட்டுவது தேவையற்றது. எனவே, ஆரே காலனி பகுதியில் மெட்ரோ பணிமனை அமைக்கும் அமைக்கும் பணிகளுக்கு தடை விதித்துள்ளேன். மாற்று ஏற்பாடுகளை ஆய்வு செய்யுமாறு உத்தரவும் பிறப்பித்துள்ளேன். மெட்ரோ பணிமனை அமைப்பதற்குதான் தடையே தவிர, மெட்ரோ ரயில் பணிகளுக்கு அல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.