டெல்லி:
இந்திய அரசியலமைப்பு சட்ட தினத்தையொட்டி, பாராளுமன்ற இருஅவைகளின் கூட்டுக் கூட்டத்தில், பிரதமர் மோடி உரையை புறக்கணித்த எதிர்க்கட்சிகள் சோனியா தலைமையில் அம்பேத்கர் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்திய அரசியலமைப்பு சட்ட தினத்தை முன்னிட்டு, பாராளுமன்ற கூட்டுக்கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.
மத்திய பாஜக ஆட்சியின் அதிகார மீறல் காரணமாக, அரசியல் சாசனத்தை மீறி, பெரும்பான்மை பெறாத நிலையிலும், பல மாநிலங்களில் எதிர்க்கட்சிகளை உடைத்தும், எதிர்க்கட்சியினரை மிரட்டியும் ஆட்சி அமைத்து வருகிறது.
சமீபத்தில்,கர்நாடகா மற்றும் அரியானாவிலும் ஆட்சியை கைப்பற்றிய பாரதிய ஜனதா, தற்போது மகாராஷ்டிராவிலும் ஆட்சியை பிடிக்க முயற்சித்து வருகிறது.
இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், இன்று இந்திய இந்திய அரசியலமைப்பு சட்ட தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பாராளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுவதாக அறிவிக்கப்பட்டது.
ஜனநாயகத்துக்கு எதிராக செயல்படும் மோடி ஆட்சியின் அதிகார மீறலை கண்டித்தும், அரசியலமைப்பு படுகொலையை எதிர்த் தும், காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் மோடியின் உரையை புறக்கணித்து, அவையைவிட்டு வெளியேறின. அவர்கள் அனைவரும், பாராளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, சோனியா காந்தி பாராளுமன்றத்தின், இந்திய அரசியலமைப்பின் முன்னுரையை வாசித்தார். இதன் மூலம் மோடி அரசின் ஜனநாயககொலைக்கு எதிரான எதிர்க்கட்சி எதிர்ப்புக்கு அவர் தலைமை தாங்கினார்.