மும்பை:
மகாராஷ்டிரா மாநிலத்தில் நிலவி வரும் அரசியல் குளறுபடிக்கு இடையே, யார் பதவி ஏற்றாலும், இதில் வெற்றி பெற்றது ராகுல்காந்திதான் என்பது, அவரது சாதுர்யமான அரசியல் சாணக்கியம் மூலம் நிரூபணமாகி உள்ளது. அவரது நேர்மையான அரசியலுக்கு இதுவே சாட்சியாகவும், மகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களில் நடைபெற்று வரும் அரசியல் நிகழ்வுகள் அதை பறைசாற்றி வருகின்றன என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து உள்ளனர்.
இளம்தலைவராக, சுறுசுறுப்பாக பணியாற்றி வந்த இளம்அரசியல்வாதியான ராகுல்காந்தி, பாஜகவுக்கு எதிராக, ஆக்ரோஷமாகவும், அதிரடியாக கருத்து தெரிவித்து, காங்கிரஸ் தொண்டர்களிடையே புதுரத்தத்தை பாய்ச்சி, நாடு முழுவதும் அயராது சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தூக்கிக் கிடந்த காங்கிரஸ் பேரியக்கதை எழுப்பி, சுறுசுறுப்பாக களத்தில் இறங்கச் செய்து பணியாற்றி வந்தார்.
ஆனால், இந்த ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் கட்சி அடைந்த பெருந்தோல்விக்கு பொறுப்பேற்று தனது கட்சித்தலைவர் பதவியை ராஜினாமா செய்தார், காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்திலேயே, தனக்கு மூத்த தலைவர்கள் ஆதரவு தரவில்லை என்று பகிரங்கமாகவும் குற்றம் சாட்டினார். தற்போது வயநாடு எம்.பியாக உள்ள ராகுல்காந்தி, தீவிர அரசியலில் கவனம் செலுத்தாமல், தனது பணிகளை செவ்வனே செய்து வருகிறார்.
இந்த நிலையில்தான், கடந்த மாதம் மகாராஷ்டிரா, அரியான மாநில சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டது. மகாராஷ்டிரா மற்றும் அரியானாவில், நடைபெற்றுள்ள தேர்தல் முடிவுகளில், பாஜக தனிப்பெரும்பான்மை பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கு காரணம், ராகுல்காந்தியின் அரசியல் சாணக்கியத்தனம் என்று விமர்சிக்கப்படுகிறது.
அரியானா மாநிலத்தில் ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்காத பாஜக, தேவிலாலின் பேரனான துஷ்யந்த் சவுதாலா தலைமையிலான ஜனநாயக ஜனதா கட்சி ஆதரவைப பெற, அவருக்கு துணைமுதல்வர் ஆசை காட்டி, ஆட்சியை கைப்பற்றியது.
அதுபோலத்தான் தற்போது சரத்பவாரின் தேசிய ஜனநாயக கட்சி உறுப்பினரான, பவாரின் மருமகன் அஜித் பவாருக்கு துணை முதல்வர் ஆசைக்காட்டி ஆட்சி அமைத்துள்ளது. தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் எழுந்துள்ள அரசியல் குழப்பத்துக்கு காரணமாக, பவார் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள பிளவு மற்றும் சிவசேனாவின் முதல்வர் பதவி என்ற பிடிவாதங்களை காரணமாக கூறப்பட்டாலும், ராகுல்காந்தியின் தேர்தல் எழுச்சி உரை காரணமாகவே, மாநிலத்தில், பாஜக பெரும்பான்மை பெற முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், காங்கிரஸ் கட்சிக்கும் 44 இடங்கள் கிடைத்தது.
மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமை ஆர்வம் காட்டாத நிலையில், சோனியா காந்தியா, பிரியங்கா காந்தியோ, காங்கிரஸ் மூத்த தலைவர்களோ ஆர்வம் காட்டாத நிலையில், ராகுல்காந்திதான், மகாராஷ்டிரா மற்றும் அரியானா ஆகிய இரண்டு மாநிலங்களும் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
அவரின் அதிரடி தேர்தல் பிரசாரம் காரணமாகவே, தூக்கிக்கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி சுறுசுறுப்பாகி, இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் ஓரளவு வெற்றி பெற முடிந்தது.
ஆனால், தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாதது, ராகுல் காந்தியை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதுகுறித்து கடந்த ஒரு மாதமாக ராகுல்காந்தி ஏதும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்து வந்த நிலையில், தற்போது அங்கு ஏற்பட்டு வரும் அரசியல் நிகழ்வுகள், காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களுக்கு தோல்வியின் படிப்பினை கற்பிக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க ஆதரவு கோரி சிவசேனா கட்சி, என்சிபி, காங்கிரஸ் கட்சிகளின் கதவை தட்டியது. இதுகுறித்து ஆலோசனை நடத்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியின் முடிவு குறித்து, ராகுல்காந்தியுடன் ஆலோசனை நடத்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், சோனியாகாந்தியின் உணர்வுகைளை தெரிவித்தார்.
சிவசேனாவுக்கு ஆதரவு அளிப்பதற்கு, கட்சியில் எந்தவித எதிர்ப்பும் வெளியாகாத நிலையில், பாஜகவை அதிகாரத்திலிருந்து விலக்கி வைக்கும் வைககும் வகையில் சிவசேனாவுடனான பேச்சுவார்த்தைக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது.
இந்த ஆதரவு ராகுல்காந்தியின் அரசியல் நிலைப்பாடு குறித்து, கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகும் என எதிர்பார்க்கப் பட்டாலும், மகாராஷ்டிராவில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்துக்கு ராகுல்காந்தியின் அரசியல் சாணக்கியத்தினம் ஒழிந்து உள்ளதை மறுப்பதற்கில்லை.
2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸின் தோல்விக்கு பொறுப்பேற்று கடந்த ஜூலை மாதம் கட்சியின் உயர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகியபோது, ராகுல்காந்தியின் அரசியல் வாழ்க்கை அஸ்தமனம் என்று வலதுசாரி ஊடகங்கள் கூக்குரலிட்டன.
ஆனால், தற்போது, மகாராஷ்டிராவில் நடைபெற்று வரும் நிகழ்வுகள், பாஜகவின் திட்டங்களை முறியடித்து காங்கிரஸ்-என்.சி.பி-சிவசேனா அரசாங்கத்தை நிறுவும் வாய்ப்பு உருவாகி வருகிறது… இது வெற்றிகரமாக முடிந்தால், அதுதான் ராகுல்காந்தியின் மிகப்பெரிய வெற்றி…..என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
நாளை வெளிவர உள்ள உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைப் பொறுத்து, ஃபட்னாவிஸ் தனது அரசாங்கத்தின் பெரும்பான்மையை மாநில சட்ட சபையில் நிரூபிக்க முடிந்தாலும், முதலமைச்சர் பதவி பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் அல்லது சிவசேனாவின் உத்தவ் தாக்கரே ஆகியோருக்கு சென்றாலும், மகாராஷ்டிராவில் பாஜகவுக்கு சாவுமணி அளித்த வெற்றியாளராகவே முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இருப்பார் என்பதில் ஐயமேதுமில்லை.
இதைத்தான் கடந்த மாதம் நடைபெற்று முடிந்துள்ள மகாராஷ்டிரா மற்றும் அரியானா தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன… ராகுலின் அரசியல் தத்துவத்தையும், சாணக்கியத்தனத்தையும் நிரூபிக்கின்றன. இதுவே… ராகுல்காந்தியின் நேர்மையான அரசியலுக்கு சாட்சி…. என்றும் கூறப்படுகிறது.