சென்னை:
ராமசாமி படையாச்சியார் சிலை, மணிமண்டபத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று இன்று மதியம் திறந்து வைக்கிறார்.
கடலூர் மாவட்டத்தில் ராமசாமி படையாட்சியரின் முழு உருவ வெண்கல சிலையுடன் கூடிய நினைவு மண்டபம் ரூ.2.13. கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி ,கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் 16.3348 சதுர மீட்டர் பரப்பளவில் 0.69 ஏர்ஸ் நிலத்தில் (74 ஆயிரத்து 120 சதுர அடி) நினைவு மண்டபம் கட்டப்பட்டு உள்ளது.
இந்த நினைவு மண்டபத்தில் உள்ள ( 25ந்தேதி) ராமசாமி படையாச்சியார் சிலை மற்றும் மணிமண்டபத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று திறந்து வைக்கிறார்.
இன்று மதியம் நடைபெறும் விழாவில் துணைமுதல்வர் ஓபிஎஸ் தலைமையில், அமைச்சர் கடம்பூர் ராஜு முன்னிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்த வைக்கிறார்.
விழாவில் தமிழக அமைச்சர்கள் சிவி.சண்முகம், எம்.சி.சம்பத், கே.பி.அன்பழகன், இரா.துரைக்கண்ணு, கே.சி.வீரமணி உள்பட எம்.பி., எம்.எல்.ஏக்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வன்னியர் அமைப்புகள், பொதுமக்கள் கலந்துகொள்கின்றனர்.