சென்னை
காவிரி கூக்குரல் என்னும் ஜக்கி வாசுதேவ் இயக்கம் குறித்து மூத்த பத்திரிகையாளர் என் ராம் சரமாரியாக கேள்விகள் எழுப்பி உள்ளார்.
ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் ஆரம்பித்த காவிரி கூக்குரல் இயக்கம் என்பது காவிரி நதியை அழிவில் இருந்து காக்க உருவாக்கப்பட்டதாகும் இந்த இயக்கம் ஆற்றின் கரையில் உள்ள விளை நிலங்களில் சுமார் 242 கோடி மரங்களை நட உத்தேசித்துள்ளது. இந்த திட்டத்துக்கு சுமார் ரூ.11000 கோடி செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மக்களிடம் ஒவ்வொரு மரத்துக்கும் ரூ.42 நிதி உதவி கோரப்பட்டுள்ளது.
நேற்று சென்னையில் காவிரி கூக்குரல் பற்றிய விசாரணை என்னும் தலைப்பில் ஆசியப் பத்திரிகையாளர் கல்லூரி ஒரு கலந்துரையாடலை நடத்தியது. இந்த இயக்கத்தின் பல்வேறு திட்டங்கள் பற்றி அப்போது விவாதிக்கப்பட்டது. இந்த விவாதத்தின் இறுதிக் கட்டத்தில் பல சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தங்கள் கருத்தை எடுத்துரைத்தனர். அப்போது மூத்த பத்திரிகையாளரும் இந்து பத்திரிகையின் இயக்குநர்களில் ஒருவருமான என் ராம் தனது கருத்தைக் கூறினார்.
இந்து என் ராம், “ஜக்கி வாசுதேவ் விளை நிலங்களில் மரங்கள் நடப்படும் எனத் தெரிவித்தார். அத்துடன் மரங்களை நடுவதால் வழக்கமான பயிர்களை விளைவிக்க முடியாத விவசாயிகளுக்கு அதற்கான இழப்பீடு வழங்கப் போவதாகவும் இதனால் இது சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் விவசாயிகளுக்கு வருமானம் தரும் திட்டம் எனவும் தெரிவித்திருந்தார். ஆனால் அவருடைய குறியீடு அடிக்கடி மாறி வருகிறது
காவிரி கூக்குரல் என்றால் என்ன? அதன் கொள்கைகள் என்ன? அது நடைமுறைக்கு ஒத்து வருமா? ஆனால் அவ்வாறு எந்த ஒரு கொள்கையும் கிடையாது ஏனெனில் அது அடிக்கடி மாறி வருகிறது இந்த திட்டத்தின்படி இது விஞ்ஞான பூரவமனதாக இல்லாததால் தவறான ஒன்றாகத் தோன்றுகிறது. மேல்ம் இந்த திட்டத்தின் மூலம் ஏற்படும் பல விளைவுகள் அபாயகரமாக மாற வாய்ப்புள்ளது.
இன்னொரு முக்கிய விவகாரம் என்னவென்றால் இது மக்கலின் முதலீட்டைக் கோரி மக்கள் பணத்தில் செயல்படுத்தப்படும் திட்டமாகும். நிதி அளவில் இது மாபெரும் திட்டமாகும். இதில் 242 கோடி மரங்கள் 11000 கோடி ரூபாய் செலவில் நடப்பட உள்ளன. இந்தப் பணத்தில் இதுவரை 0.5% மட்டுமே வசூலாகி உள்ளது. எனவே மேலும் இது தொடரும் ம்ன்பு இப்போதே இதைச் சரிவரச் சோதிக்க வேண்டிய நேரமாகும்.
இந்த பணத்தை எப்படி நிர்வகிக்க உள்ளனர்? யார் இதைக் கண்காணிக்க உள்ளனர். இந்த திட்டத்தில் ஒரு வெளிப்படை தன்மை மற்றும் எவ்வித அறிக்கையும் இல்லை. இவ்வளவு பணத்தை எவ்வாறு செலவழிக்கத் திட்டமிட்டுள்ளனர்? இது குறித்தும் சரியான அறிக்கையோ அல்லது திட்டத்துக்கான சரியான நிர்வாக அமைப்போ இதுவரை அறிவிக்கபடாதது கவனிக்கத் தக்க ஒன்றாகும்.
இந்த திட்டத்துக்கு மாநில மற்றும் மத்திய அரசுகள் அனுமதி அளித்தது குறித்தும் பல கேள்விகள் உள்ளன. ஒரு அரசியல் பத்திரிகையாளனாக எனக்குள் பல கேள்விகள் எழுகின்றன. ஈஷா யோகா மையத்துக்கு இந்த திட்டத்தை வடிவமைத்து அதன் சட்டங்களை வகுத்தது யார்? இதனால் பொதுமக்களுக்கு என்ன நன்மை? இந்த திட்டத்தின் மூலம் நேர்மறையான் முடிவுகள் ஏற்படலாம் எனத் தெரிந்தும் இந்த திட்டத்துக்கு மத்திய மாநில அரசுகள் ஏன் கீழ்ப்படிகின்றன? ” எனத் தனது உரையில் தெரிவித்துள்ளார்.