சென்னை:

2021ம் ஆண்டு “அதிசயம் நிகழும்” என்ற ரஜினி நடிக்கும் சினிமா வேண்டுமானால் வரும் என்று,  ரஜினியின் பேச்சு குறித்து தமிழ்நாடு காங்கிரஸ்* கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்து உள்ளார்.  ரஜினி போன்றவர்கள் அரசியலுக்கு வருவது தவறான ஒன்று என்பது எனது கருத்து என்றும் கூறி உள்ளார்.

சென்னையில் நடைபெற்ற கமல்-60 என்ற கமல்ஹாசன் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், 2021-ம  அதிசயம் நடக்கும் என்றும், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எடப்பாடி முதல்வர் ஆவார் என கனவு கண்டிருப்பாரா என்று நக்கலாக பேசியிருந்தார்.

ரஜினியின் இந்த கருத்துக்கு திமுக தலைவர் ஸ்டாலினைத் தவிர அனைத்து கட்சிகளும் கடுமையாக பதில் தெரிவித்து விட்டன. இந்த நிலையில், நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரியும், ரஜினியின் கருத்துக்கு நக்கலாக பதில் அளித்துள்ளார்.

2021-ல் அதிசயம் நடக்கும் என நடிகர் ரஜினிகாந்த் பேசியது, சினிமா படத்தை பற்றி இருக்கும் என்றவர், அரசியல் வேறு, நடிப்பு வேறு என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும் என்றும், ரசிகர் மன்றத்தை நம்பி அரசியலுக்கு வந்தால் அதிசயம் நடக்காது.  அவர்  ரசிகர் மன்றம் ரசிகர் மன்றங்கள் மூலம் நற்பணிகள் செய்திருக்கலாம், ஆனால் அதை வைத்து மக்கள் ஓட்டு போடுவார்கள் என நம்பி ரஜினி அரசியலுக்கு வந்தால் அதிசயம் நடக்காது என்று கிண்டலடித்தார்.

தொடர்ந்து உள்ளாட்சி தேர்தல் தொடர்பான கேள்விக்கு, தமிழகஅரசு அறிவித்துள்ள உள்ளாட்சி தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல்,  குதிரை பேரத்துக்கு வழி வகுக்கும் என்றும், உள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தில் அதிமுக அரசு நேர்மையுடன் செயல்படவில்லை எனவும் குற்றஞ்சாட்டினார்.  தமிழகஅரசு கொண்டு வந்துள்ள மறைமுகத் தேர்தல் முறைக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் வன்மையான கண்டனத்தை பதிவு செய்து கொள்வதாகவும், தேர்தலுக்கு பிறகு தலைவர், மேயர் பதவிகளுக்காக கவுன்சிலர்களை தூக்கிச் சென்று பேரம் பேசப்படும் நிலை உருவாகும்.

இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறினார்.