சபரிமலையில் மூன்றாம் வருடம் செல்வோர் கவனத்துக்கு…..
சபரிமலைக்கு மூன்றாம் முறையாக செல்வோர் செய்ய வேண்டிய முக்கியமான ஒன்று என்ன என்று இங்கு காண்போம்.
சபரிமலைக்கு மூன்றாம் வருடம் செல்வோர் தங்கள் கழுத்தில் ஒரு மணியை அணிந்து சென்று அதை ஐயப்பன் கோவிலில் சேர்க்க வேண்டும் என ஒரு ஐதிகம் உண்டு. பொதுவாக ஐயப்பன் மலைக்குச் செல்லும் சிறுவர்களை மணிகண்டன் என அழைப்பது போல் இவர்களையும் மணிகண்ட சாமி என அழைப்பது வழக்கமாகும்.
இவ்வாறு மணிகளை அங்குச் சேர்க்கும் போது பலர் கூடி அதைப் பிடுங்கி தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் செல்வது வழக்கமாகும். இந்த மணியை தங்கள் வீட்டில் பூஜையில் வைத்தால் மக்கட்பேறு இல்லாதவர்கள் மக்கள் பேறு அடைவார்கள் எனவும் நம்பிக்கை உண்டு.
இந்த மணி சமர்ப்பிப்பது குறித்து ”என் ஐயன் ஏழைப் பங்காளன்” என்னும் முகநூல் பக்க பதிவு இதோ :
மணிகண்டன் என்ற பெயருக்கான அர்த்தம் வேறு என்றாலும் மறுவியது மங்கலப்பொருளாகிய மணி என்பதால் பகவானாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதால் தான் பூஜித்த மணிகள் தேவசம்போர்டால் விற்பனை செய்யப்பட்டது பக்தர்கள் பின்னாளில் ஆசையோடு மணிகளைக் கட்டிவந்து நேரடியாகக் கோவிலில் கட்டி பூசிக்கத் தொடங்கினார்கள்
அந்த பூசித்த மணியைத் தாமே எடுத்துக் கொள்ளாமல் கேட்கும் பக்தர்களுக்குக் கொடுத்தனர் தற்போது அது அடிதடியாக மாறுமளவு போய்விட்டது தயவுசெய்து கன்னிமூல கணபதி கோவிலில் கட்டுவதாகக் கோவிலை படுத்த வேண்டாம். நேராக மணியை மணிமண்டப வாசலில் வைத்துவிடுங்கள்
இல்லையேல் கேட்பவர்களுக்கு மணிமண்டப வாசலில் வைத்துக் கொடுத்துவிடுங்கள் முடிந்த வரை பிள்ளை வரம் கேட்பவர்கள் உங்களோடு வந்தால் மணிமண்டப வாசலில் மனதால் வணங்கிக் கேட்பவர்க்குத் தந்துவிடுங்கள்.