சென்னை: டிசம்பர் 2ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பாணை வெளியிடப்படும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அந்த வழக்கு நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு முன்பு, இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த சில பணிகள் செய்யவேண்டி இருப்பதால், ஒரு மாதம் அவகாசம் வேண்டும் என்று கேட்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட திமுக தரப்பு, வேண்டுமென்றே தேர்தலை நடத்தாமல் இழுக்கடிப்பதாக குற்றம்சாட்டியது.
அதற்கு தமிழ்நாடு தேர்தல் ஆணையம் பதிலளித்தது. அப்போது கூறியதாவது: தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டு உள்ளன. திட்டமிட்டபடி, உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை டிசம்பர் 2ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது.


அதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், அந்த விவரங்களை டிசம்பர் 13ம் தேதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியது. இதையடுத்து, டிசம்பர் 2ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் தேதி தொடர்பான அறிப்பாணை வெளியிடப்படுகிறது.