டில்லி
மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைப்பது குறித்து சரத்பவார் இன்று சோனியாவை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக மற்றும் சிவசேனா கூட்டணிக்குப் பெரும்பான்மை கிடைத்தும் முதல்வர் பதவியைப் பங்கு பிரிப்பதில் மோதல் ஏற்பட்டது. சிவசேனாவின் ஒவ்வொரு கட்சிக்கும் இரண்டரை ஆண்டு முதல்வர் வாய்ப்பு திட்டத்தை பாஜக ஒப்புக் கொள்ளவில்லை. எனவே சிவசேனா பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டது.
தற்போது சிவசேனா கட்சி , தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி இணைந்து குறைந்த பட்ச பொதுத் திட்டம் ஒன்றை அமைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த திட்ட வரைவுடன் தேசிய வாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.
இது குறித்து இன்றைக்கு சரத்பவார் செய்தியாளர்களிடம் இது போல ஒரு பேச்சு வார்த்தை நடந்ததா என்பதே தமக்குத் தெரியாது என்னும் வகையில் பேட்டி அளித்தது குழப்பத்தை உண்டாக்கி இருக்கிறது. குழப்பத்தில் ஆகி உள்ள இந்த நேரத்தில் இன்று மாலை சோனியா காந்தியை சரத்பவார் சந்தித்துப் பேச உள்ளது பரபரப்பை அதிகரித்துள்ளது.