மைசூரு

ர்நாடக மாநில முன்னாள் காங்கிரஸ் அமைச்சரும் அக்கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினருமான தன்வீர் சேட் மீது கொலைத் தாக்குதல் நடந்துள்ளது.

முன்னாள் கர்நாடக மாநில அமைச்சரும் காங்கிரஸ் கட்சி சட்டப்பேரவை உறுப்பினருமான தன்வீர் சேட் மைசூரு நகரில் ஒரு திருமண வரவேற்பு விழாவில் கலந்துக் கொண்டுள்ளார்.  தன்வீர் சேட் நண்பர் இல்லத் திருமண விழாவில் அவர் கலந்துக் கொண்ட போது சுமார் 22 வயதுள்ள பர்ஹான் என்னும் இளைஞர் அவர் மீது பாய்ந்து தாம் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தால் கழுத்தில் தாக்கி உள்ளார்.

அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்த நிலையில் தன்வீரை தாக்கிய பர்ஹான் தப்பி ஓட முயன்றுள்ளார்.  அங்கிருந்தோர் அவரைப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.   பர்ஹான் தனக்கு வேலை வாங்கித் தர தன்வீர் சேட்டிடம் கோரிக்கை விடுத்ததாகவும் அவருடைய கோரிக்கையை நிராகரித்ததால் ஆத்திரம் அடைந்து அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் தன்வீர் சேட் கழுத்தில் பலத்த காயம் அடைந்துள்ளார்.  இவரை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்  பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.  அவருடைய நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  கைது செய்யப்பட்ட பர்ஹானிடம் விசாரணை தொடர்ந்து வருகிறது.