டில்லி
இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ் ஏ போப்டே நாளை பதவி ஏற்கிறார்.
உச்சநீதிமன்ற 46 ஆம் தலைமை நீதிபதியாகப் பணி புரிந்து வந்த ரஞ்சன் கோகாய் இன்றுடன் பணி ஓய்வு பெற்றுளர். நேற்று மற்றும் இன்றைய நட்கள் விடுமுறை நாட்கள் என்பதால் அவர் வெள்ளிக்கிழமையுடன் தனது இறுதிப் பணி நாளை நிறைவு செய்தார்.
ரஞ்சன்கோகாய் தனது பதவிக்காலத்தில் அயோத்தியா வழக்கு, ரபேல் ஒப்பந்த வழக்கு, சபரிமலை இளம் பெண்கள் அனுமதி உள்ளிட்ட பல முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கி உள்ளார். இவர் நேற்று முன் தினம் தனது கடைசிப் பணி நாளை நிறைவு செய்துள்ளார்.
ரஞ்சன் கோகாய்க்கு அடுத்தபடியாக 47 ஆம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியா எச் ஏ போப்டா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் நாளைக் காலை 9.30 மணிக்குப் பதவி ஏற்க உள்ளார். இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.