பாங்காங்

ந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜப்பான் நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் தாரோ கோனோவை சந்தித்து பேசியுள்ளார்.

தற்போது ஆசியான எனப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் அமைப்பின் சார்பில் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் மாநாடு தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காங்கில் நடைபெறுகிறது.    இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் கல்ந்துக் கொண்டுள்ளனர்.

இந்தியாவின் சார்பில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நத்  சிங் நேற்று தாய்லாந்து சென்றுள்ளார்.   பாங்காங் நகரில் ராஜ்நாத் சிங்குக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.   இதே மாநாட்டில் கலந்துக் கொள்ள ஜப்பான் நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் தாரோ கோனோ அங்கு வந்துள்ளார்.

இவர்கள் இருவரும் இன்று சந்திப்பு ஒன்றை நிகழ்த்தி உள்ளனர்.  அந்த சந்திப்பில் பாதுகாப்புத் துறையில் இரு நாடுகள் இடையே உள்ள ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து பேச்சு வார்த்தைகள் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.