டெல்லி: தொடர் நஷ்டத்தின் காரணமாக, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் இயக்குனர் பொறுப்பிலிருந்து அனில் அம்பானி ராஜினாமா செய்திருக்கிறார்.


இந்திய தொலைத்தொடர்பு துறையில் மிக முக்கியமான நிறுவனம் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம். அந் நிறுவனத்தின் இயக்குனர் பொறுப்பிலிருந்து அனில் அம்பானி ராஜினாமா செய்துள்ளார். அவருடன் 4 உயரதிகாரிகளும் விலகி இருக்கின்றனர்.


சாயா விரானி, ரைனா கரானி, மஞ்சரி காகேர், சுரேஷ் ரங்காச்சார் ஆகியோரும் இயக்குனர் பொறுப்பிலிருந்து விலகி உள்ளனர். ரிலையன்ஸ் நிறுவனத்தின் 2020ம் ஆண்டுக்க்கான முதல் காலாண்டு அறிக்கை ஏற்கனவே வெளியானது.


அதில், 366 கோடி ரூபாய் இழப்பு என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. தற்போது, 2வது காலாண்டில் அந்த இழப்பு அதிகரித்து, 30,142 கோடியாக மாறி இருக்கிறது. அதன் விளைவாக இந்த ராஜினாமா நிகழ்ந்திருக்கிறது.
முன்னதாக கடந்த அக்டோபர் மாதத்தில் இயக்குனர் மற்றும் தலைமை நிதி அலுவலராக பணியாற்றி வந்த மணிகண்டன் ராஜினாமா செய்திருந்தார்.