தராபாத்

தெலுங்கானா அரசுடன் போக்குவரத்துக் கழகங்களை இணைக்க வேண்டும் என்னும் கோரிக்கையை 41 நாள் போராட்டத்துக்கு பிறகு ஊழியர்கள் கைவிட்டுள்ளனர்.

கடந்த அக்டோப்ர் 5 ஆம் தேதி முதல் தெலுங்கானா மாநில சாலைப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் 26 கோரிக்கைகளை முன் வைத்து வேலை நிறுத்தம் செய்து போராடி வறுக்கின்றனர்.   இதில் முக்கிய கோரிக்கை தங்கள் போக்குவரத்துக் கழகத்தை அரசுடன் இணைத்து தங்களை அரசு ஊழியர்கள் ஆக்க வேண்டும் என்பதாகும்.  ஆனால் தெலுங்கானா மாநில அரசு இந்த வேலை நிறுத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தது.

இந்த வேலை நிறுத்தம் சட்டவிரோதமானது எனக் கூறி அரசுடன் போக்குவரத்துக் கழகத்தை இணைக்க மறுத்தது.  அத்துடன் ஊழியர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த அரசு ஒப்புக் கொள்ளவில்லை..   இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் தலையிட்டு அரசும் ஊழியர்கள் பிரதிநிதிகளும் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என அறிவுறுத்தியது.   ஆனால் அதற்கு அரசு ஒப்புக கொள்ளவில்லை.

அத்துடன் ஊழியர்களுக்கு ரூ.47 கோடி நிவாரணம் அளிக்க  உயர்நீதிமன்றம் தெரிவித்த யோசனையையும் அரசு நிராகரித்த்த்.   இந்த நிலையை மேலும் கடினமாக்குவது போல் அரசு 5100 போக்குவரத்துக் கழக தடங்களில் தனியாரை அனுமதிக்க முடிவு செய்தது.   இது மொத்தமுள்ள தடங்களில் பாதி ஆகும்.

போராட்டம் ஆரம்பித்து 41 நாட்களான நிலையில் இன்று ஊழியர் சங்கங்களின் கூட்டுச் செயற்குழு அரசுடன் போக்குவரத்துக் கழகத்தை இணைக்கும் கோரிக்கையைக் கைவிடத் தீர்மானித்துள்ளது.   அத்துடன் மற்ற கோரிக்கைகளுக்காக அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தக் குழு தயாராகி உள்ளது.