டெல்லி:
இன்று இந்தியாவில் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பிரபல வலைதள நிறுவனமான கூகுள், 7 வயது சிறுமி வரை ஓவியத்தை தனது வலைப்பதிவின் டூடுலாக வெளியிட்டு கவுரவப்படுத்தி உள்ளது.
சர்வதேச குழந்தைகள் தினம் நவம்பர் 20ந்தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஆனால், இந்தியாவில், ஜவஹர்லால் நேரு பிறந்த தினமான நவம்பர் 14ந்தேதியே குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
குழந்தைகள் தினத்தை கவுரவிக்கும் வகையில், கூகுள் நாடு முழுவதும் ஓவியப்போட்டி நடத்தியது. இதில், இந்தியா முழுவதும் இருந்து 1.1. லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். அவர்கள் வரைந்த ஓவியங்களை ஆய்வு செய்த கூகுள், 7வயது சிறுமியின் ஓவியத்தை வெற்றிபெற்றதாக அறிவித்தது.
அந்த பிரசித்தி பெற்ற படத்தை, கூகுள் குழந்தைகள் தினமான இன்று டூடுலாக பதிவிட்டு, அந்த சிறுமியை கவுரவப்படுத்தி உள்ளது.
கூகுள் நடத்திய ஓவிய போட்டி:
ஜவஹர்லால் நேரு பிறந்த நாளை கவுரவிக்கும் விதமாக கூகுள் ஓவியப்போட்டி ஒன்றை நடத்தியது. ஓவியப் போட்டியின் தலைப்பாக ‘When I grow up, I hope …’ என்ற தலைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. இந்த போட்டியில்சுமார் 1.1. லட்சம் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இதில், அரியானா மாநிலம் கூர்கோனைச் சேர்ந்த 7 வயது சிறுமி திவ்யான்ஷி சிங்கால் வரைந்த ஓவியம் முதலிடம் பெற்றது.
ஓவியத்தில், ’நடக்கும் மரங்கள்’ என்ற தலைப்பில் அந்த சிறுமி கூகுள் டூமுலை வரைந்துள்ளார். இந்த ஓவியம் குறித்து கூறிய அந்த சிறுமி, சிறுமி கூறியது, ‘’ எனது பாட்டி வீட்டுக்கு அருகில் மரங்கள் வெட்டப்படுவது குறித்து அவர் மிகவும் வருத்தம் அடைந்தார். அப்போது நான் நினைத்தேன், மரங்களால் நடக்க முடிந்தால் நாம் அதனை வெட்ட வேண்டாமே’’. அதன் எதிரொலியாகவே இந்த ஓவியத்தை வரைந்தேன் என்று தெரிவித்து உள்ளார்.
அந்த ஓவியத்தை குழந்தைகள் தினமான இன்று கூகுள் டூடுலாக பதிவேற்றி உள்ளது.