டெல்லி:

காராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழலால் பாஜக, சிவசேனை கூட்டணி முறிந்துவிட்டது. இதையடுத்து, மத்திய அமைச்சர் பதவியில் இருந்த சிவசேனா அமைச்சர் சாவந்த் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அவர் வகித்து வந்த துறைகள், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டு உள்ளது.

மகாராஷ்டிராவில் பாஜக – சிவசேனா கட்சிகள் கூட்டணி  ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. மாநில முதல்வர் பதவியை தங்களுக்கு இரண்டரை ஆண்டு காலம் விட்டுத்தர வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தியதைத் தொடர்ந்து, பாஜக, சிவசேனா கூட்டணி முறிந்தது. இதையடுத்து, சிவசேனா கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் சாவந்த் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டார்.

இதையடுத்து அவர் கவனித்து மத்திய கனரக தொழில், பொதுத்துறை நிறுவனத்துறை  பிரகாஷ் ஜவடேகருக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கூடுதல் பொறுப்பு அளிக்குமாறு கூறியபிரதமர் மோடியின் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.