சென்னை:

திமுக, அதிமுக ஒழிக்கப்பட வேண்டும் என்ற எனது கனவை ரஜினி நிறைவேற்றுவார் என்று  காந்திய மக்கள் இயக்கம் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்து உள்ளார்.

ஆன்மிக அரசியலைத் தொடங்கப்போவதாக கூறிவரும் நடிகர் ரஜினி, அவ்வப்போது பாஜகவுக்கு ஆதரவாகவே கருத்து தெரிவித்து வருகிறார். சமீபத்தில், அவர் கூறிய, தனக்கு காவிப்பூச சிலர் முயற்சி செய்கிறார்கள் அதில் நான் சிக்க மாட்டேன் என்று தெரிவித்தார்.

இதையடுத்து, ரஜினியின் அரசியல் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில், ரஜினியின் நண்பரும், காந்திய மக்கள் இயக்கம் தலைவருமான தமிழருவி மணியன் ரஜினியின் அரசியல் குறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

ஜினி நிச்சயம் கட்சி தொடங்குவார் என்று மீண்டும் நம்பிக்கை தெரிவித்துள்ள  தமிழருவி மணியன்,  “எனக்கு ஒரு கனவு உள்ளது. அது, தமிழகத்திலிருந்து திமுக, அதிமுக ஒழிக்கப்பட வேண்டும். அதற்காக நான் எது வேண்டுமானாலும் செய்வேன் என்று ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், காவிச் சாயத்திற்குள் விழ மாட்டேன் என்று ரஜினிகாந்த் கூறியிருப்பது சரிதான் என்றும்,  இதைத்தான் நானும் கடந்த இரண்டரை வருடமாக சொல்லி வருகிறேன் என்றார்.

ரஜினி  தனியாகவே அரசியலுக்கு வருவார் என்றும், அவர் யாருக்கும், எந்தவொரு கட்சியியிலும் சிக்க மாட்டார் என்றும் தெரிவித்து உள்ளவர், தமிழகத்தில் ரஜினி  தலைமையில் கூட்டணி அமைக்கப்படும், அந்த கூட்டணியில் யார் யார் இருப்பார்கள் என்பதை இப்போது கூற முடியாது, அது அப்போதைய அரசியலைப் பொறுத்தது என்றார்.

அடுத்த ஆண்டு ரஜினி நிச்சயம் கட்சித் தொடங்குவார் என்று நம்பிக்கை தெரிவித்த தமிழருவி மணியன், அவர் தனது புதிய கட்சியுன் 2021ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலை சந்திப்பார் என்றும்,  ரஜினி இதுவரை தனக்குப் பிடிக்காத விஷயங்களிலிருந்து விலகியே இருந்துள்ளார் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

தனது ஒரே கனவு, இலக்கு இதுதான் என்று கூறியவர்,  அதை நிறைவேற்ற நான் எது வேண்டுமானாலும் செய்வேன், தமிழகத்தை அழித்து, குட்டிச்சுவராக்கிய திமுக, அதிமுக இரண்டுமே அழிக்கப்பட வேண்டும் என்று ஆவேசமாக கூறியவர், அதிமுக, திமுகஇந்த இரு திராவிடக் கட்சிகளையும் கடந்த 50 வருடமாக பார்த்து வருகிறேன். இவர்களின் பிடியிலிருந்து தமிழகத்தை மீட்க என்ன வேண்டுமானாலும் செய்ய நான் தயார். எனது கனவை ரஜினி நிறைவேற்றுவார். இதை நான் 100 சதவீதம் நம்புகிறேன் என்றார்.

ரஜினி  ஒரு போதும் திமுக, அதிமுகவுடன் அணி சேர மாட்டார் என்று ஆணித்தரமாக கூறுவதாக தெரிவித்தவர், தான்  கடந்த 30 மாதமாக அவரை தொடர்ந்து சந்தித்து வருகிறேன். அவரை எனக்கு நன்றாக தெரியும். அதில் எனக்கு சிறிதும் சந்தேகம் இல்லை  என்றார்.

மேலும், எனது அரசியல் வாழ்க்கை  பெருந்தலைவர் காமராஜர் 1967ம் ஆண்டு தோற்கடிக்கப்பட்ட நாளிலிருந்துதான் தொடங்கியது  என்றும் தெரிவித்தார்.

“அரசியல் தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும்!”  என்று ஏற்கனவே தமிழருவி மணியன் நமது பத்திரிகை.காம் இணைய இதழுக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டி காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்…

https://www.patrikai.com/political-leaders-have-to-retire-at-the-age-of-75-tamilaruvi-maniyan-interview-part-2/