சென்னை:

சென்னை கடற்கரை- செங்கல்பட்டு இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால், அடுத்த  5 நாட்களுக்கு இரவு ரயில் சேவை மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு இந்தியன் ரயில்வே அறிவித்து உள்ளது.

தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டு செல்லும் வழியில் உள்ள கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தில் பொறியியல் பணி நடைபெறுவதால் இன்று முதல் 5 நாட்களுக்குச் சென்னை கடற்கரை- செங்கல்பட்டு வழியே இயங்கும் ரயில்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த மாற்றம் இன்றுமுதல் 5 நாட்கள் நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

செங்கல்பட்டு-சென்னை கடற்கரை: இரவு 10.15, 11.10 மணிக்குச் செல்லும் ரயில்கள் செங்கல்பட்டிலிருந்து இயங்காது. தாம்பரத்திலிருந்து கடற்கரை வரை இயங்கும்.

சென்னை கடற்கரை-செங்கல்பட்டு : இரவு 8.01, 9.18 மணிக்குச் செல்லும் ரயில்கள் செங்கல்பட்டு வரை செல்லாது. தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.

சென்னை கடற்கரை-செங்கல்பட்டு: அதிகாலை 3.55, 4.35, 5.15, 5.50, காலை 6.05, 6.43, மாலை 5.18, இரவு 8.01, 9.18 ஆகிய மின்சார ரயில்கள் தாம்பரம் வரை மட்டுமே இயங்கும். தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டிற்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு-சென்னை கடற்கரை: அதிகாலை 3.55, 4.35, 4.50, காலை 6.40, 6.55, இரவு 7.25, 10.15, 11.10 ஆகிய நேரங்களில் இயங்கும் ரயில்கள் செங்கல்பட்டிலிருந்து இயங்காது. தாம்பரம் முதல் சென்னை கடற்கரைவரை மட்டுமே இயங்கும்.

செங்கல்பட்டு-சென்னை கடற்கரை இடையே காலை 8:40 மணிக்கு இயக்கப்படும் செமி பாஸ்ட் மின்சார ரயில் ரத்து செய்யப்பட இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

: