புதுடெல்லி: 2019ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான யுஜிசி – நெட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் தற்போது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இத்தேர்வுக்காக விண்ணப்பித்தவர்கள் சம்பந்தப்பட்ட இணையதளம் சென்று ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு ஆண்டின் ஜுன் மற்றும் டிசம்பர் மாதங்களில் யுஜிசி நெட் தேர்வு தேசியளவில் நடத்தப்படுகிறது. இது ஆன்லைன் முறையிலான தேர்வாகும். குறைந்தபட்சம் முதுநிலைப் பட்டப்படிப்பை முடித்தவர்கள் மற்றும் தேவைப்படும் மதிப்பெண் சதவிகிதம் வைத்திருப்போர் இத்தேர்வை எழுத முடியும்.

இத்தேர்வில் வெற்றிபெறும் பட்சத்தில், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில், உதவிப் பேராசிரியர்களாக பணிநியமனம் பெறலாம்.

https://ugcnet.nta.nic.in/webinfo/public/home.aspx என்ற வலைதளம் சென்று, download admit card என்ற இணைப்பை கிளிக் செய்து உள்ளே சென்று, விண்ணப்ப எண்ணையும் ஏற்கனவே உருவாக்கிய கடவுச்சொல்லையும் உள்ளிட்டு ஹால் டிக்கெட்டைப் பெறலாம்.